21-8- highwas-1

21-8- highwas5jpg

நெடுஞ்சாலை துறை மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர். தரேஸ்அஹமது செய்தியாளர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டார்.

அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

பெரம்பலூர் மாவட்டம் நெடுஞ்சாலைத்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) மூலம் 2011-12 ஆம் ஆண்டில் 52 பணிகள் 108.25கி.மீ. நீளத்திற்கு ரூ.22.96 கோடி மதிப்பீட்டிலும்,

2012-13 ஆம் ஆண்டு 57 பணிகள் 97.91 கி.மீ. நீளத்திற்கு ரூ.26.30 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அகலப்படுத்தி மேம்பாடு செய்யப்பட்டும், 2 பாலப்பணிகள் ரூ.61.77 இலட்சம் மதிப்பீட்டிலும் பணிகள் முடிக்கப்பட்டது. 2013-14 ஆம் ஆண்டில் 39 பணிகள் 83.35 கி.மீ. நீளத்தில் ரூ.36.52 கோடி மதிப்பீட்டிலும், 2014-15ஆம் நிதியாண்டில், 64 சாலைப்பணிகள் 127.06 கி.மீ நீளத்திற்கு ரூ. 83.69 கோடி மதிப்பீட்டில், சாலைகள் அகலப்படுத்தி மேம்பாடு செய்து முடிக்கப்பட்டது.

மேலும், பெரம்பலூர் நகருக்கு புறவழிச்சாலை அமைக்கும் பணியானது 9.075 கி.மீ. நீளத்திற்கு ரூ.28.65 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டு சாலைகள் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது.

மாநில உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் திட்டம் 2013-14 ன்கீழ் 3 பணிகள் 23.00 கி.மீ நீளத்தில் ரூ. 25.14 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டது. இவற்றில், ஆலத்தூர்-செட்டிக்குளம்-செஞ்சேரி சாலையில் 15.30 கி.மீ. நீளத்திற்கு ரூ. 13.73 கோடி மதிப்பீட்டிலும், ஆத்தூர்-பெரம்பலூர் சாலையிலிருந்து, பெரம்பலூர் புறவழிச்சாலைக்கு எளம்பலூர் கிராமம் வழியாக இணைப்பு சாலை அமைத்தல் 2.70 கி.மீ. நீளத்திற்கு ரூ. 5.46 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் செட்டிக்குளம்-நக்கசேலம் சாலையில் 5.00 கி.மீ. நீளத்திற்கு ரூ. 5.95 கோடி மதிப்பீட்டிலும் சாலைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டது.

இவற்றில் 2012 ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சித்தலைவர்களின் மாநாட்டின்போது, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் சிறப்பு அறிவிப்பின்படி, குன்னம்-வேப்பூர்-வயலப்பாடி சாலையில் 9.20 கி.மீ. நீளத்திற்கு ரூ. 12.40 கோடி மதிப்பீட்டிலும், மாத்தூர்-திட்டக்குடி சாலை 8.00 கி.மீ. நீளத்திற்கு ரூ. 15.23 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் புதுவேட்டக்குடி-லப்பைக்குடிகாடு சாலையில் 1.50 கி.மீ. நீளத்திற்கு ரூ. 2.56 கோடி மதிப்பீட்டிலும் பணிகள் முடிக்கப்பட்டு சாலைகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும், நடப்பாண்டில் புதுவேட்டக்குடி-லப்பைக்குடிகாடு சாலையில் 8.50 கி.மீ. நீளத்திற்கு ரூ. 14.10 கோடி மதிப்பீட்டிலும், குன்னம்-வேப்பூர்-வயலப்பாடி சாலையில் 9.60 கி.மீ. நீளத்திற்கு ரூ. 16.48 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் கிருஷ்ணாபுரம்-வெண்பாவூர்-பெரியவடகரை-கைகளத்தூர்-பில்லாங்குளம்-கூகையூர் சாலையை மாவட்ட முக்கிய சாலையாக தரம் உயர்த்த 9.60 கி.மீ. நீளத்திற்கு, ரூ. 13.00 கோடி மதிப்பீட்டிலும், ஒருங்கணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, பணிகள் முன்னேற்றத்தில் உள்ளது.

நடப்பாண்டில் தொடர்ந்து, ரூ.4.60 கோடி மதிப்பீட்டில் அகரம்-சீகூர்-தாமரைப்பூண்டி (வழி) அங்கனூர்-சன்னாசிநல்லூர் சாலை கி.மீ.6ஃ2ல் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

2015-16ஆம் நிதியாண்டில் 98 சாலைப்பணிகள் 137.97 கி.மீ. நீளத்திற்கு ரூ. 138.14 கோடி மதிப்பீட்டிலும், 16 சிறு பாலப்பணிகள் ரூ.11.08 கோடி மதிப்பீட்டிலும், 2 அலுவலக கட்டிடங்கள் ரூ. 70.00 இலட்சம் மதிப்பீட்டிலும், ஆக மொத்தம் 116 பணிகள் 137.97 கி.மீ நீளத்திற்கு ரூ. 149.93 கோடி மதிப்பீட்டில் பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு செயலாக்கப்பட்டு வருகிறது.

இவற்றில், கிருஷ்ணாபுரம் – வெண்பாவூர் – பெரியவடகரை – கைகளத்தூர் -பில்லாங்குளம் – கூகையூர் சாலை மாவட்ட முக்கிய சாலையாக தரம் உயர்த்த 9.00 கி.மீ. நீளத்திற்கு ரூ. 15.00 கோடி மதிப்பீட்டிலும், இதர மாவட்ட சாலைகளான செந்துறை, அங்கனூர், புதுவேட்டக்குடி, நன்னை ஆகிய சாலைகளை, எறையூர் சர்க்கரை ஆலைகளுடன் இணைத்து, 7.00 மீட்டர் சாலையாக அகலப்படுத்தி, மாநில சாலைகளுக்கு இணையாக தரம் உயர்த்த 6.00 கி.மீ. நீளத்திற்கு ரூ.12.30 கோடி மதிப்பீட்டில் மறுகட்டமைப்பு செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, நடப்பாண்டில் ரூ. 123.42 கோடிக்கு, 101.32 கி.மீ. நீளத்திற்கு சாலைகளை அகலப்படுத்தி, மேம்பாடு செய்ய தமிழக அரசு ஆணை வழங்கியுள்ளது. கோட்டப்பொறியாளர்(நெ) க(ம)ப அலுவலக கட்டிடம் கட்ட , ரூ. 50.00 இலட்சமும், தரக்கட்டுப்பாடு(நெ) உட்கோட்ட அலுவலக கட்டிடம் கட்ட ரூ. 20.00 இலட்சமும் ஒதுக்கி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த நான்காண்டுகளில், பெரம்பலூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் சாலை மேம்பாட்டிற்கு ரூ. 249.00 கோடி செலவிடப்பட்டுள்ளது. மேலும் நடப்பு நிதியாண்டில், ரூ. 75.00 கோடி சாலை மேம்பாட்டிற்கு அரசு நிர்வாக அனுமதி அளித்துள்ளது. மேலும், ளுஐயுகு திட்டத்தில், 5 பாலங்கள் கட்ட ரூ. 14.75 கோடி அனுமதி அளிக்கப்படும் நிலையில் உள்ளது.

பெரம்பலூர்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை (NH -226 EXTENSION )யில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 24 கி.மீ. சாலை ரூ.64 கோடி மதிப்பீட்டில் 10 மீட்டர் அகலத்திற்கு மேம்பாடு செய்ய வேலைகள் ஆரம்பிக்கப்பட உள்ளது.

கடந்த நான்கு ஆண்டு மற்றும் நடப்பாண்டிற்கும் மொத்தமாக, ரூ. 404.00 கோடி சாலை மேம்பாட்டிற்கு, பெரம்பலூர் மாவட்டத்திற்கு அரசு ஒதுக்கியுள்ளது. என தெரிவித்தார;.

இந்த செய்தியாளர;களின் பயணத்தின் போது கோட்டப்பபொறியாளர; கிருஷ்ணசாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பாவேந்தன், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் மற்றும் அனைத்து பத்திரிக்கையாளர்களும் இந்த செய்தியாளர் பயணத்தின் போது உடனிருந்தனர்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!