vellanthanki_amman-lake-collectorபெரம்பலூரில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக வேகமாக நிரம்பி வரும் நீர்நிலைகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ்அஹமது இன்று பார்வையிட்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 73 ஏரிகளில் இன்றைய நிலவரப்படி 40 ஏரிகள் முழுக்கொள்ளவை எட்டியுள்ளது. நீர்நிரம்பிய ஏரிகளிலிருந்து தொடர்ந்து உபரி நீர; வெளியேற்றப்பட்டு வருகின்றது.

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள துறைமங்கலம் ஏரிக்கு தொடர்ந்து நீர்வருவதை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது, ஏரிக்கு வரும் நீரின் அளவினை தொடர்ந்து கண்காணித்திடவும், தேவை ஏற்படின் நீரினை முறையாக வெளியேற்றவும் அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரைகளை வழங்கினார்.

அதனை தொடர்ந்து பெரம்பலூர் நகரிலுள்ள அரணாரை ஏரி, வெள்ளதாங்கி அம்மன் ஏரிகளின் கரை முழுதும் நடந்து சென்று பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், அங்குள்ள மதகுகளின் உறுதித்தன்மை குறித்தும், தேவைக்கு ஏற்ப தண்ணீர் வெளியேற்றப்படுகிறதா என்றும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் ஏரிகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது எனவே பொதுப்பணித்துறை அலுவலர்கள் ஏரிகளில் உள்ள நீரின் அளவினை தொடர்ந்து கண்கானித்திட வேண்டும் என்றும், தேவையான பகுதிகளில் மணல் மூட்டைகளை அடுக்கி ஏரியின் கரைகளை பலப்படுத்திட வேண்டும் என்றும், அலுவலர்கள் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும், எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ்அஹமது உத்தரவிட்டார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!