voters listவாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணி சிறப்பு முகாம்களை பயன்படுத்திக்கொள்ள வாக்காளர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர். தரேஸ் அஹமது அழைப்பு

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி 2016ம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணி 15.09.2015 முதல் துவங்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. இப்பணி 14.10.2015 வரை நடைபெற உள்ளது.

இந்த சுருக்கத்திருத்தப் பணியின்போது 01.01.2016 தேதியன்று தகுதியான நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியான வாக்காளர்களின் தங்களின் பெயர்களை புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கவோ, அல்லது ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்கள் தங்களின் பெயர், முகவரி போன்ற தகவல்களில் திருத்தங்களை மெற்கொள்ளவோ, பெயர் நீக்கம் செய்யவும் செய்யவோ விண்ணப்பிக்கலாம்.

இதற்காக வருகின்ற 04.10.2015 மற்றும் 11.10.2015 ஆகிய இரண்டு ஞாயிற்று கிழமைகளிலும் சிறப்பு முகாம்கள் அந்தந்த வாக்குசாவடிகளில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் பிழைகள் ஏற்படுவதை தவிர்க்க www.elections.tn.gov.in/eregistration என்ற இணையதளத்தில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், நீக்கம் செய்தல், முதலிய கோரிக்கைகளை பதிவு செய்திட இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் இணையதளத்தின் மூலமாக விண்ணப்பங்களை பதிவு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கு விண்ணப்பதாரர்கள் தங்களது வண்ண புகைப்படம் ஒன்றினை கொண்டு வரவேண்டும்.

இணையதளத்தில் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் பிரிண்ட் எடுத்து சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு விசாரணைக்காக அனுப்பப்படும். இணையதளம் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீட்டிற்கு வந்து விசாரணை செய்வார்கள். அது சமயம் வயதுக்கான ஆதாரம், இருப்பிடத்திற்கான ஆதாரம் ஆகியவற்றின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.

சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்களை தவிர இதர நாட்களில் விண்ணப்பதாரர்கள் தங்கள் பகுதிக்கு அருகிலுள்ள வருவாய் வட்டாட்சியா; அலுவலகங்களில் இயங்கும் இ-சேவை மையங்கள், புதுவாழ்வு திட்ட வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் இயங்கும் கணினி மையம் மூலமாக இணையதளத்தில் பதிவு செய்யலாம். இதற்காக கோரிக்கை ஒன்றுக்கு ரூ.10- ம்; பிரிண்ட் எடுக்க ஒரு பக்கத்திற்கு ரூ.3- ம் கட்டணம் செலுத்த வேண்டும். பொது மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!