41 pound gold jewelery looted at various places near Perambalur!

பெரம்பலூர் நடந்த இருவேறு கொள்ளை சம்பவங்களில் சுமார் 41 பவுன் தங்க நகைகள் கொள்ளையான சம்வபம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், லப்பைக்குடிக்காடு, ஜமாலியா நகரை சேர்ந்தவர் காஜாமொய்தீன் மகன் அப்துல்லா (வயது 50). இவர் நேற்று காலை வீட்டி பூட்டி திருச்சி மருத்துவமனைக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு வந்து நள்ளிரவு வந்து திரும்பி பார்த்த போது, வீட்டின் ஜன்னல் கம்பியை உடைத்து, பீரோவில் இருந்த 35 பவுன் தங்க நகைகளை கொள்ளையர்கள் எடுத்து சென்றனர்.

இதே போன்று, கொளக்காநத்தம் அருகே உள்ள கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல் (வயது 70), தச்சுத் தொழிலாளி. இவரது மனைவி லோகம்மாள் (வயது 65), நேற்றிரவு வீட்டின் உள்ளே தூங்கி கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத மர்ம நபர் டவுசர் அணிந்து கொண்டு வந்து, லோகம்மாள் அணிந்திருந்த 5 பவுன் தங்க தாலிக்கொடி மற்றும் முக்கால் பவுன் மதிப்புள்ள குண்டு ஆகியவற்றை கழட்டி எடுத்து சென்றனர்.


இந்த இரண்டு சம்பவங்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் முறையே மங்கலமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபனும், மருவத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத் கண்ணன் ஆகிய இருவரும் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வருகின்றனர். முன்னதாக, மோப்ப நாய் மற்றும் தடய அறவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கொள்ளையர்களின் தடயங்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் இந்த இரு கொள்ளை சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!