Accident collapsed in commodity auto kit in Namakkal; Old tire seller kills
நாமக்கல்லில் சரக்கு ஆட்டோ கிணற்றில் கவிழ்ந்த விபத்தில் பழைய டயர் விற்பைனயாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள குறிஞ்சி நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (55). இவர் நாமக்கல் ராமாபுரம் புதூர் ரோட்டில் பழைய டயர் விற்பனை செய்து வருகிறார்.
இன்று காலை செல்வராஜ் தனது அக்கா மகன் பிரகாஷ் (41)க்கு சொந்தமான சரக்கு ஆட்டோவில் சென்று பழைய டயர்கைள ஏற்றி இறக்கிவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து ஆட்டோவை நிறுத்தி விட்டு சென்றனர். பின்னர் செல்வராஜ் சரக்கு ஆட்டோவை ஓட்ட முயற்சித்துள்ளார். அப்போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ அருகில் இருந்த 70 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றுக்குள் தலைகுப்புற கவிழ்ந்தது.
இதனைக் கண்ட அவரது மனைவி அக்கம் பக்கத்தினைர அழைத்துள்ளார். அவர்கள் நாமக்கல் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் கிரேன் உதவியுடன் கிணற்றில் இருந்து சரக்கு ஆட்டோவை மீட்டனர்.
கிணற்றுக்குள் விழுந்து பலத்த காயமடைந்ததால் ஆட்டோவை ஓட்டிய செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் உயிரிழந்த செல்வராஜிற்கு சுபா என்ற மனைவியும், நந்தினி (20) என்ற மகளும் மற்றும் பாலாஜி (19) என்ற மகனும் உள்ளனர்.
இச்சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.