Agriculture College Setup in Vepanthattai Area : Candidate T.R Parivendar Asure

படம: பாலையூர் கிராமம்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை பகுதியில் வேளாண் கல்லூரி அமைக்கப்படும் என மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் ஐ.ஜே.கே.,நிறுவனர் டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர் பிரச்சாராத்தில் தெரிவித்தார்.
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேப்பந்தட்டை, பாலையூர், தொண்டப்பாடி, நெய்குப்பை, வெண்பாவூர், வடகரை, நூத்தப்பூர், பில்லாங்குளம், காரியானூர், வெள்ளுவாடி, மாவிலங்கை, திருவாலந்துறை, அகரம், அயன்பேரையூர் உள்பட்ட கிராமங்களுக்கு சென்று பொது மக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.
இந்த நிகழ்வின் போது தழுதாழை டி.சி.பி பாஸ்கர், மாவட்ட மகளிர் அணி மகாதேவி ஜெயபால், வேப்பந்தட்டை ஊராட்சி செயலாளர் அழகுவேல், பிரதிநிதி சீனீவாசன், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் மணிவண்ணன், வெள்ளுவாடி ரவி திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் விசிக கட்சியை சேர்ந்த மண்டல பொறுப்பாளர் இரா.கிட்டு, பெரம்பலூர் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம், மாவட்ட துணை செயலாளர் வெங்கனூர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் உடன் சென்றிருந்தனர்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது பாரிவேந்தர்., பேசியதாவது, அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றி இந்தியாவிலேயே முன் மாதிரியான தொகுதியாக பெரம்பலூர் பாரளுமன்ற தொகுதியை மாற்றுவேன், இத்தொகுதியிலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆண்டு ஒன்றுக்கு தலா 100 பேர் வீதம் தேர்ந்தெடுத்து 300 பேருக்கு இலவச கல்வியும், 300 பேருக்கு வேலைவாய்ப்பும் உருவாக்கி தருவேன்.
வேப்பந்தட்டை ஒன்றியத்தில் வேளாண்கல்லூரி, இளைஞர்களுக்கு சிறப்பு பொருளாதார மண்டலம், விவசாயிகளுக்கு குளிர்பதன கிடங்கு வசதி, கனவு திட்டமான ரயில் பாதை திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இப்பகுதியில் செயல்படும் நடுநிலைப் பள்ளி உயர்நிலைப்பள்ளியாக செயல்படும்.
மக்கள் பிரச்சினைகளை தீர்க்க எந்த ஒரு பெரிய திட்டமாக இருந்தாலும் அரசிடம் பேசி நடவடிக்கை எடுப்பேன். விவசாய விளைப் பொருட்களுக்கு குளிர்பதன கிடங்கு வசதி ஏற்படுத்தி தருவேன். வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் விவசாய பொருட்கள் தொடர்பான தொழிற்சாலை கொண்ட சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.
பெரம்பலூர் வளர்ச்சிக்காக அரசு மருத்துவமனை கல்லூரி மற்றும் கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்களை மீண்டும் கொண்டு வருவேன். மேலும் மக்கள் கஷ்டங்களை அறிந்த திமுக நகை கடன் தள்ளுபடி, இளைஞர்களுக்கு, பெண்களுக்கு வேலை வாய்ப்பு என பல நல்ல திட்டங்களை செயல்படுத்த உள்ளது என்று கூறினார்.
வாக்கு சேகரிக்க வந்த பாரிவேந்தருக்கு ஆங்காங்கே பெண்கள் ஆரத்தி எடுத்தனர். கிராமங்களின் முகப்புகளில் மேளம்தாளம் முழங்க பட்டாசுகள் வெடித்தும் சிறப்பான உற்சாக வரவேற்பு அளித்தனர்.