AIADMK two leaves symbol: Election Commission may investigate; Madras High Court lifts stay order!

அதிமுக ஒருங்கிணைப்பு குழு வா.புகழேந்தி தொடர்ந்துள்ள புதிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சுப்ரமணியம் அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது எடப்பாடி பழனிசாமி தரப்பில் தேர்தல் ஆணையம் விசாரிக்க கூடாது என அளித்த மனு ஏற்று வழங்கப்பட்டது. தடையானையை நீக்க கூறி வா.புகழேந்தி புதிதாக ஒரு மனுவினை சமர்ப்பித்தார். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குவதாக ஆணை பிறப்பித்தது.

இன்று காலை 10:30 மணிக்கு வா.புகழேந்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், தடையானையை நீக்கி தேர்தல் ஆணையம் விசாரணையை தொடர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புகழேந்தி புதிதாக ஒரு வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்தார். தேர்தல் ஆணையம் விசாரிப்பதற்கு தடை விதித்ததை நீக்க வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்து இருந்தார். அவரது வழக்கு டெல்லி உயர்நீதி மன்றம் சம்பந்தமானது எனவும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு தவறான தகவலை அளித்து தடையானைக் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டு புதிதாக மனு தாக்கல் செய்தார் புகழேந்தி தரப்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி வாதாடினர் அந்த மனுவின் மீது விசாரணை முடிந்து இன்றைய தினம் தடையானையை நீக்கி தேர்தல் ஆணையம் விசாரிக்க நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!