Amma Gymnasium and Garden Park Opening Ceremony at Elambalur Min Nagar Near in Perambalur

பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள (எளம்பலூர் ஊராட்சிக்கு உட்பட்ட) மினநகரில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உடற்பயிற்சிக்கூடம் மற்றும் அம்மா பூங்காவை சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.தமிழச்செல்வன் (பெரம்பலூர்), ஆர்.டி.இராமசந்திரன் (குன்னம்) மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.அழகிரிசாமி ஆகியோர்களது முன்னிலையில் பெரம்பலூர் எம்.பி மருதராஜா இன்று திறந்து வைத்தார்.

பெரம்பலூர் ஒன்றியத்திற்குட்பட்ட எளம்பலூர் மின்நகரில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உடற்பயிற்சிக்கூடம், ரூ.20 இலட்சம் மதிப்பிலான அம்மா பூங்கா இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் பெரம்பலூருக்கு அருகிலுள்ள மின்நகர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் உடற்பயிற்சி செய்வதற்கும், நடைபயிற்சி மேற்கொள்ளவும், மேலும் அப்பகுதிகளை சேர;ந்த குழந்தைகள் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு உபகரணங்களில் விளையாடுவதற்கும் எழிலார்ந்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

இந்நிகழ்ச்சியில் அரசு பணியளார்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!