#Amma-medical-shop-sellur-raju
அம்மா மருந்தகங்கள் மூலம் தமிழகம் முழுவதும் ரூ.700 கோடிக்கு மருந்துகள் விற்பனை ஆகி இருப்பதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கூட்டுறவுத்துறை அலுவலகத்தில் துறையின் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, நடப்பு ஆண்டில் ரூ.8 ஆயிரம் கோடிக்கு பயிர்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக கூறினார்.லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக காய்கறிகளின் விலை ஏற்றத்தில் இருந்து பொதுமக்களை காத்திடவிலை நிலை நிறுத்தும் நிதியில் இருந்தரூ.5 கோடி விடுவிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள281 அம்மா மருந்தகங்களின் மூலம் ரூ.700 கோடிக்கு மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.