Ari, Embroidery Training for Women at IOB – RESTI: Sub-Collector Gokul Inaugurates!
பெரம்பலூர், எளம்பலூர் சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்புபயிற்சி மையத்தில் பெண்களுக்கான ஆரி மற்றும் எம்பிராய்டரி பயிற்சி துவக்க விழாவை சப் – கலெக்டர் சு. கோகுல் தலைமையேற்று தொடங்கி வைத்தார். அப்போர் அவர் பேசியதாவது:
பெண்களின் பொருளாதார முன்னேற்றம் அவர்களின் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மேன்மை அடைய செய்யும், சமூகம் வளமை பெறும், நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கும் என்றும், சுய தொழில் பயிற்சி பெறும் பெண்கள், பயிற்சியோடு நின்றுவிடாமல் தொழிலாக மாற்றி உத்வேகத்துடன் செயல்படுமாறும், அரசு தரும் அனைத்து நலத் திட்டங்களையும் முறையாக பயன்படுத்துமாறும், செயல்படுத்துமாறும், வரையறைகளை பின்பற்று மாறும் கூறினார். இப்பயிற்சியில் பங்கு பெறும் பயிற்சியாளர்களுக்கு ,பயிற்சிக்கான உபகரணங்களை வழங்கினார்.
முன்னோடி வங்கி மேலாளர் பாரத்குமார் , பெரம்பலூர்கிளை ஐஓபி முதுநிலை மேலாளர் இளவேனில் , ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குனர் ஆனந்தி மற்றும் மைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.