As the month of Ramadan is about to begin, provide rice to mosques without delay: Indian National League demands!

இந்திய தேசிய லீக் மாநில தலைவர் முனிருத்தீன் ஷெரீப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

ரமலான் பண்டிகைக்கு முன்பாக இஸ்லாமியர்கள் ஒரு மாத நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் சுஹுர் எனப்படும் விடியலுக்கு முந்தைய உணவை சாப்பிட்ட பிறகு சூரியன் மறையும் வரை எதுவும் உண்ணாமல் நோன்பு இருப்பார்கள். பிறை கணக்குப்படி 30 நாட்கள் நோன்பு இருப்பது இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று.

அந்த வகையில் பிப்ரவரி 27-ம் தேதி அமாவாசை வருகிறது. அதிலிருந்து பிறை தெரியும் நாளுக்கு மறுநாளில் இருந்து ரமலான் நோன்பை இஸ்லாமியர்கள் கடைபிடிக்க தொடங்குவர். அந்த வகையில் மார்ச் 1-ம் தேதி முதல் ரமலான் மாத நோன்பு தொடங்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க ஒவ்வொரு ஆண்டும் பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு இலவச அரிசி வழங்கும் நடைமுறையை அறிமுகப்படுத்தி வைத்தார்.

இதன் தொடர்ச்சி அமைந்துள்ள தி.மு.க. அரசு முதல்வர் ஸ்டாலின் ரமலான் நேற்கும் இஸ்லாமியர்களுக்கு பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி தயாரிக்க இலவசமாக அரிசியை கடந்த 3 ஆண்டுகளாக தங்குதடையில்லாமல் வழங்கி வருகிறார். அந்த வகையில் மார்ச் 1-ம் தேதி ரமலான் நோன்பு தமிழகத்தில் துவங்கும் என தெரிகிறது.

ரமலான் மாத நோன்பிற்கு இன்னும் 8 நாட்களே உள்ளதால், காலதாமின்றி பள்ளிவாசல்களுக்கு ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க இலவச அரிசியை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என இந்திய தேசிய லீக் சார்பில் கோரிக்கை விடுக்கிறோம், என அதில் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!