At an estimated Rs 31 lakh to farmers for farm equipment: MLA presented Chandrasekaran
பச்சுடையாம்பட்டியில் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திடத்தின்கீழ் ரூ.31 லட்சம் மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு பண்ணைக்கருவிகளை சேந்தமங்கலம் எம்எல்ஏ சந்திரசேகரன் வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பச்சுடையாம்பட்டியில் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மை திட்டம், பண்ணை வள மேம்பாட்டு பணிகள், பயனாளிகளுக்கு பண்ணைக்கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நீர்வடிப்பகுதி மேலாண்மை உதவி இயக்குநர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் சேந்தமங்கலம் எம்எல்ஏ சந்திரசேகரன் கலந்துகொண்டு 246 பயனாளிகளுக்கு ரூ.31 லட்சத்து 12 ஆயிரத்து 500 மதிப்பில் புல்வெட்டும் இயந்திரம், பவர் தெளிப்பான், தார்பாலின், தட்டுவெட்டும் இயந்திரம் உள்ளிட்ட பண்ணைக்கருவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் ராமசாமி, செல்வம், நிர்வாகிகள் பூபதி, ரவிச்சந்திரன் மற்றும் மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.