At Veppandattai, AIADMK Union Activists Meeting: MLAs attended.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் வேப்பந்தட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத் தலைவர் லோகநாதன் வரவேற்றுப் பேசினார். இந்த ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளரும், குன்னம் எம்.எல்.ஏ வுமான ஆர்.டி. ராமச்சந்திரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெண்களின் முன்னேற்றத்திற்காகவே வாழ்ந்து மறைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்திற்காக தாலிக்கு தங்கம் திட்டம், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அம்மா இரு சக்கர வாகனம், மகப்பேறு காலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான ஊக்கத்தொகை, மகளிர் மகப்பேறு பெட்டகம் உள்ளிட்ட ஏராளமான பல திட்டங்களை கொண்டு வந்தவர். தற்போது அவரது வழியில் சிறப்பாக தமிழகத்தை முன்னோடி மாவட்டமாக மாநிலமாக முன்னெடுத்து வழி நடத்திச் செல்பவர் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. எனவே எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் வளர்த்து விட்டு சென்றுள்ள இந்த இயக்கத்தை நூறாண்டுகளுக்கு மேலும் சிறப்பாக இயங்க செய்ய வேண்டும் என பேசினார். தொடர்ந்து பேசிய பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் வேப்பந்தட்டை மற்றும் தொண்டப்பாடி ஆகிய கிராமங்களில் அம்மா மினி கிளினிக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் விரைவில் செய்யப்படும் என கூறினார். மேலும் இக்கூட்டத்தில் வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய இணை செயலாளர் பெரியம்மாள் நீலன், மாவிலிங்கை கிளை செயலாளர் முத்துசாமி மற்றும் அ.தி.மு.க.வினர் திரளாக கலந்துகொண்டனர். மாவட்ட பிரதிநிதி துரை.கிருஷ்ணா நன்றி கூறினார்.