Awareness about toilets: lead MLA Thamilselvan
ஒவ்வொருவரின் இல்லங்களிலும் தனிநபர் இல்ல கழிப்பறைகளை அமைப்போம் – எளம்பலூரில் நடைபெற்ற தனிநபர் இல்லக் கழிவறைகளின் பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன் பேச்சு.
கழிவறைகளின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் திட்டம் மற்றும் புது வாழ்வுத் திட்ட களப்பணியாளா;களைக் கொண்டு, பெரம்பலூh; மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் களப்பணியாளர்களின் பணியினை மேம்படுத்தும் வகையில் ஸ்கோப் தொண்டு நிறுவனம் மற்றும் பன்னாட்டு குழந்தைகள் நல குழுமத்தின் மூலம் இரண்டு நாள் பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் வே.சாந்தா தொடங்கி வைத்தார்.
அதன்படி நேற்று (27.06.2017) பெரம்பலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட எளம்பலூர் கிராமத்தில் மகளிர் திட்டம் மற்றும் புது வாழ்வுத் திட்ட களப்பணியாளர்கள் மற்றும் ஸ்கோப் தொண்டு நிறுவனம் மற்றும் பன்னாட்டு குழந்தைகள் நல குழுமத்தின் மூலம் திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாக விழிப்புணர்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன் தலைமையில் “திறந்தவெளியில் மலம் கழிக்கமாட்டோம். தனிநபர் இல்லக் கழிவறைகளை முறையாக பயன்படுத்துவோம்” என்று ஊர் கிராம பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றனர்.
அதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் பேசியதாவது :
திறந்தவெளியில் மலம் கழிப்பதன் மூலமாக கண்களுக்கு தெரியாமலும், காற்றின் மூலமாகவும், நமக்கு வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.
அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. இதன்காரணமாக ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தமிழக முன்னாள் முதலமைச்சரால் தமிழகம் முழுவதும் மகளிர் சுகாதார வளாகங்கள் ஏற்படுத்தப்பட்டன.
இதன்காரணமாக தனிநபர் இல்லக் கழிவறைகள் அமைக்க இயலாத ஏழை எளிய மக்களும், இதுபோன்ற மகளிர் சுகாதார வளாகங்களை பயன்படுத்தி வந்தனர். கழிவறைகளின் பயன்பாடுகளை கிராம மக்களிடையே அதிகப்படுத்தும் நோக்கில் தற்போது அனைத்து பகுதிகளிலும் தனிநபர் இல்லக் கழிவறைகள் ரூ.12,000- மதிப்பில் அமைக்கப்பட்டு வருகின்றன. எனவே பொதுமக்கள் அனைவரும் இத்தகைய தனிநபர் இல்லக் கழிவறைகளை முறையாக பயன்படுத்திக் கொண்டு, திறந்தவெளியில் மலம் கழிப்பதால் உண்டாகும் பல்வேறு நோய்களிலிருந்து தங்களையும், தங்களது குடும்பத்தாரையும் பாதுகாத்துக்கொண்டு, நலமான வாழ்வை மேற்கொள்ளவேண்டும், என பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஸ்ரீதர், வட்டார வளா;ச்சி அலுவலர் மணிவாசகம், தூய்மை பாரத இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜபூபதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.