Bank employees demonstrated in Thanjavur condemning the management of Indian banks.
தஞ்சாவூர் : இந்திய வங்கிகள் நிர்வாகத்தைக் கண்டித்து ‘ஸ்டேட்’ வங்கி எதிரே அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அன்பழகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய வங்கிகள் நிர்வாகத்தின் 2 சத உத்தேச ஊதிய உயர்வை கண்டித்தும் வங்கி ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை கொச்சைப்படுத்தும் நிர்வாகத்தைக் கண்டிப்பதோடு வங்கி ஊழியர்களின் நலனை அலட்சியப்படும் இந்திய வங்கிகள் நிர்வாகம் மற்றும் மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.
வங்கிகள் நிர்வாகத்தைக் கண்டித்து தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளர் தமிழ்ச்செல்வன் வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினார்கள். இதில், திரளான வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.