Chief Minister opened the classroom of the Arumbavur school near Perambalur.
பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.2.09 கோடி மதிப்பீட்டில் சுமார் 400 சதுரஅடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள 10 வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம் மற்றும் கழிவறைக் கட்டிடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து கணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா, அங்கிருந்த பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். மேலும், கிராமப்புறங்களில் உள்ள மாணவ, மாணவிகளும் கல்வித்துறையில் சாதிக்கவேண்டும் என்ற அடிப்படையில் அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு வகையான திட்டங்களை மாணவர்கள் முறையாக பயன்படுத்திக்கொண்டு சமுதாயத்திற்கும், குடும்பத்திற்கும் சிறந்த குடிமகனாக வாழவேண்டும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) சேதுராமன், முதன்மைக் கல்வி அலுவலர் அருள்மொழிதேவி, வேப்பந்தட்டை வருவாய் வட்டாட்சியர் பாரதிவளவன், பள்ளித் தலைமையாசிரியர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.