பெரம்பலூர் மாவட்டக் கல்வி அலுவலர் விடுத்துள்ள செய்தி குறிப்பு:
2015-2016 ஆம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 15.03.2016 முதல் 11.04.2016 முடிய நடைபெற உள்ளது. அதன் பொருட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் 32 தேர்வு மையங்களில் மேற்படி தேர்வுகள் நடைபெற உள்ளது.
தேர்வு எழுதுவோர் ஆண்கள் 5124 , பெண்கள் 4513, கூடுதல் 9637 பேர் தேர்வு எழுதினர்.
தேர்வு செம்மையாக நடைபெறும் பொருட்டு முதன்மை கண்காணிப்பாளர்கள் 32 பேர், கூடுதல் கண்காணிப்பாளர்கள் 4 பேர், வினாத்தாள் கட்டுகாப்பாளர்கள் 6பேர், துறை அலுவலர் 32பேர், கூடுதல் துறை அலுவலர் 7 பேர், பறக்கும்படை அலுவலர்கள் 72பேர், வழித்தட அலுவலர் 8பேர், சொல்வதை எழுதுபவர் 25பேர், அறை கண்காணிப்பாளர் 482பேர், ஆக கூடுதல் 668பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், முதன்மைக் , மாவட்டக் கல்வி அலுவலர், அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் ஆகியோர் தலைமையில் சிறப்பு பறக்கும் படையும் நியமனம் செய்யப்பட்டுள்ளது.
இத்தேர்வில் தனித்தேர்வர்களாக 91 மாணவர்களும், 179 மாணவிகளும் என மொத்தம் 270 நபர்கள் தனி தேர்வர்களாக தங்களது தேர்வினை எழுதினர்.