Despite the central government allocating funds, those who worked under the 100-day work program are suffering because they are not getting the money! Request to the state government to provide it quickly!
கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கிராமப்புற பகுதி மக்கள் வேலையின்றி சிரமமப்படக்கூடாது என்றும், அவர்களுக்கு வாழ்வளிக்கும் விதமாக 100 நாள் வேலைத்திட்டம், அதாவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. அதில், வாய்க்கல் வெட்டுதல், குளம் மற்றும் கரைகளை சீர் செய்தல், நீர்நிலைகளை பாதுகாக்கும் பணிகள், மரக்கன்றுகள் வளர்த்தல் உள்ளிட்ட பல்வேறு உள்ளிட்ட பல பணிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 100 வேலை திட்டத்தில், கல்வரப்பு கட்டுதல், வீடு கட்டுதல்,, கழிவு நீர் வாய்க்கல் அமைத்தல், தடுப்பணை கட்டுதல், உள்ளிட்ட பணிகளும் 60 : 40 என்ற விகித்த்தில் பணிகளும் திட்டங்களும் வழங்கப்பட்டது. வேலை செய்த தொழிலாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் வரையிலும், வேலை செய்தவர்களுக்கு 10 மாதங்களுக்கு மேலாகியும் பணி செய்ததற்கான தொகையை மத்திய அரசு விடுவிடுத்தும் இன்னும் மாநில அரசு விடுவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. பணி செய்தவர்களின் நிலையை கருத்தில் கொண்டு, வேலை செய்தவர்களுக்கான முழுத் தொகையையும் உடனடியாக விடுவிக்க மாநில அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்தவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், உரிய காலத்தில் தொகை விடுவிக்கப்படாத காரணத்தால் வீடுகள், சிறுபாலங்கள், கழிவுநீர் சாக்கடை, தடுப்பணைகள், சிறு, குறு கட்டிடங்கள் பணிகள் முடிந்தும் முடியாமலும் கிடப்பில் உள்ளதோடு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருவதில் தாமதமாவதாக தெரிவிக்கின்றனர்.