Deworming tablet for 1.94 lakh students and women: Perambalur Collector Information!

தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் மாத்திரை வழங்கும் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் வெங்கடபிரியா கலந்து கொண்டு மாணவர்களுக்கு குடற்புழு மாத்திரை வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.

மேலும், பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளிடம் நீங்கள் கடந்த ஆண்டு பிளஸ் 1 படிக்கும்போது கொரானா தொற்று காரணமாக பள்ளிக்கு வராமல் இருந்துள்ளீர்கள், தற்போதும் உங்களுக்கு சில மன குழப்பங்கள் இருக்கலாம், நீங்கள் சிறப்பாக கல்வி பயில தமிழக அரசு ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகளையும், பல்வேறு யுக்திகளையும் வழங்கியுள்ளார்கள். எனவே நீங்கள் ஆசிரியர்கள் சொல்வதை பின்பற்றி முழுமையாக படித்தால் எளிதாக இருக்கும், ஆசிரியர்களின் உறுதுணையுடன் தன்னம்பிக்கையும் ஏற்படுத்திக்கொண்டு சிறப்பாக படிக்க வேண்டும்.

குடல்புழு நீக்க மாத்திரைகளை எடுத்துக்கொள்வதால் உங்களது குடலில் உள்ள புழுக்கள் நீக்கப்பட்டு உடல் ஆரோக்கியம் ஏற்படும். நீங்கள் எப்போதும் கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், கொரானா தடுப்பு நடவடிக்கைகளை நீங்கள் பின்பற்றுவதுடன் உங்களது உறவினர் நண்பர்களையும் பின்பற்ற வலியுறுத்த வேண்டும்


இன்று முதல் 18ஆம் தேதி வரையிலும், இரண்டாம் கட்டமாக 20 ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது. ஒரு வயது முதல் 19 வயது உள்ள 1,70,440 குழந்தைகளுக்கும், 20 வயது முதல் 30 வயதிலான 23, 242 பெண்களுக்கும் என மொத்தம் 1,94,682 நபர்களுக்கு குடல்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படுவதுடன், ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமலும், ஆரோக்கியமாக வாழ்வதற்கும் உதவுகிறது. குடற்புழு நீக்க மாத்திரைகள் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்படும், என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், மாநில சுகாதார புலனாய்வு மைய , இணை இயக்குநர் சுமதி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் செந்தில்குமார், சுகாதாரப் பணிகள் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!