Direct appointment of veterinary doctors under National Agricultural Scheme: Namakkal Collector
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் (என்ஏடிபி) மூலம், கால்நடை மருத்துவர் பணிக்கு தற்காலிகமாக 6 மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிட, விருப்பமுள்ள பதிவுபெற்ற கால்நடை மருத்துவ பட்டதாரிகள் தேவை.
விருப்பமுள்ளவர்கள் தங்களைப் பற்றிய முழுமையான விவரங்களுடனும், உரிய பட்டப் படிப்பு கால்நடை மருத்துவ அசல் சான்றிதழ்களுடனும் வருகிற 14ம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணிவரை சேலம், தளாவாய்ப்பட்டியில் உள்ள ஆவின் பொது மேலாளர் அலுவலகத்தில் நடைபெறும் நேரடி நியமனத் தேர்வில் கலந்து கொள்ளலாம் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.