Dispute over sitting together and drinking alcohol in Perambalur: The person who stabbed a friend surrenders to the police !!
அரியலூர் மாவட்டம், இலையூரை சேர்ந்தவர் அன்பழகன் மகன் விஜயகுமார். இவர் பெரம்பலூரில் தங்கி தனியார் இரும்புக் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இன்று மதியம் இவரும், பெரம்பலூர் எளம்பலூர் சமத்துபுரம் நகர் அருகே உள்ள காந்தி நகரை சேர்ந்த முஹமது அன்சாரி மகன் நவாஸ். (டிரைவர்) இருவரும் இன்று மதியம் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது போதையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த நவாஸ் விஜயகுமாரின் கழுந்தில் மதுபுட்டியல் குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து நவாஸ் பெரம்பலூர் போலீசில் சரண் அடைந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஜயகுமாரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர்.