District level monthly sports competitions in Namakkal: 500 participants
நாமக்கல்லில் நடைபெற்ற மாதாந்திர விளையாட்டு போட்டிகளில் 500 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாதந்தோறும் விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இந்த மாதத்திற்கான விளையாட்டு போட்டிகள் நேற்று நடைபெற்றது. விளையாட்டு போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் பெரியகருப்பன் துவக்கிவைத்தார்.
இதில் தடகள விளையாட்டு போட்டிகளில் 100 மீ ஓட்டம், 800மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், குண்டெறிதல், ஈட்டி எறிதல் மற்றும் தட்டெறிதல் போட்டிகள் நடைபெற்றது. நீச்சல் போட்டியில் 50 மீ, 100 மீ, 200 மீ மற்றும் 400 மீ ப்ரி ஸடைல் போட்டிகளும், 50 மீ பேக் ஸ்டோக், 50 மீ பிரஸ்ட் ஸ்டோக், 50 மீ பட்டர்பிளை ஸ்டோக் மற்றம் 200 மீ தனித்திறன் போட்டிகளும் நடைபெற்றது.
மேலும் கபாடி மற்றும் கால்பந்து போட்டிகளும் நடைபெற்றது. போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் நாமக்கல் மாவட்டத்தை தனியார் மற்றும் அரசு பள்ளிகளை சேர்ந்த 500 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். போட்டிகான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் மற்றும் அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.