Diwali weekend tickets Rs.1 crore fraud victims complain to SP

தீபாவளி வாரசீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடியில் ஈடுபட்டவரிடம் பணத்தை மீட்டு தரக்கோரி மாவட்ட போலீஸ் எஸ்பியிடம் கொடுத்துள்ள மனு விவரம்:

நாமக்கல் ஏ.எஸ் பேட்டையில் கடந்த 10 வருடமாக பரிபூரண விநாயகா தீபாவளி வாரசீட்டு என்ற பெயரில் ஜெயச்சந்திரன் என்பவர் நடத்தி வந்துள்ளார். இவரிடம் வாரா, வாரம் ரூ.100, ரூ.200,ரூ.300, ரூ. 500 மற்றும் ரூ. ஆயிரம் என பொதுமக்கள் பணம் செலுத்தியுள்ளனர்.

பணத்தை 50 வாரம் செலுத்த வேண்டும். மேலும் 50 வாரம் முழுமையாக செலுத்தியவர்களுக்கு 51 வது வாரத்தில் வட்டியுடன் திரும்பி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பணம் பெற்றுக் கொண்டு அவரவர்களுக்கு தனித்தனியாக அட்டை வழங்கி பணம் பெற்றுக்கொண்டு பதிவு செய்து கொடுத்துள்ளார்.

தற்போது 50 வாரம் வரை பொதுமக்களிடம் பணம் வீடுவீடாக சென்று வசூல் செய்துள்ளார். 51வது வாரம் தாங்கள் கட்டிய பணம் முதிர்வுத்தொகை வட்டியுடன் ஜெயச்சந்திரன் வீட்டிற்கு கொண்டு வந்து தருவார் என எதிர்பார்த்த மக்கள் ஏமாற்றமடைந்தனர். அவரது வீட்டில் சென்று கேட்டதற்கு வீட்டிற்கு வந்து தந்துவிடுகிறேன் எனதெரிவித்துள்ளார்.

இதை நம்பி சென்ற மக்கள் அவர் வராதது கண்டு அவருடைய செல்போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து வீட்டில் சென்று பார்த்த போது வீட்டிலும் ஜெயச்சந்திரன் இல்லாதது கண்டு பொதுமக்கள் திடுக்கிட்டனர். இதனையடுத்து நேற்று நாமக்கல் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் எஸ்பி அருளரசிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர்.

இதுகுறித்து பணம் கட்டி ஏமாற்றமடைந்தவர் தெரிவித்ததாவது:

ஜெயச்சந்திரன் தீபாவளி வார சீட்டு கடந்த 9 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இதுவரை யாரையும் ஏமாற்றாமல் 51வது வாரம் பணம் கட்டியவர்களுக்கு வட்டியுடன் திரும்ப கொடுத்துள்ளார். இதனைநம்பி எங்களுக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் என பலரையும் இந்த தீபாவளி வார சீட்டில் சேர்த்து விட்டோம். 50 வாரங்கள் பணம் கட்டிய எங்களுக்கு 51 வது வாரம் வட்டியுடன் திரும்ப கிடைக்கும் என இருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஜெயச்சந்திரன் தற்போது தலைமறைவாக உள்ளார்.

மேலும் அவருடைய செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளார். இந்த சீட்டில் சின்னமுதலைப்பட்டி பகுதியை சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணம் கட்டியுள்ளனர். மாவட்ட போலீஸ் எஸ்பி தகுந்த நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!