DMK leader Karunanidhi’s 95th birthday celebration on behalf of student wing Blood Donate Camp in Perambalur

பெரம்பலூர் மாவட்ட மாணவரணி சார்பில் 95 பேர் ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சியை முன்னாள் மத்திய அமைச்சரும், கழக கொள்கை பரப்பு செயலாளருமான ஆ.இராசா துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்!

திமுக தலைவர் கருணாநிதியின் 95 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட மாணவரணி சார்பில், மாவட்ட அமைப்பாளர் ஆர். முருகேசன் தலைமையில், மாவட்ட கழகச் செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன் முன்னிலையில், முன்னாள் மத்திய அமைச்சர்-கழக கொள்கை பரப்பு செயலாளர் ஆ. இராசா, 95 பேர் அரசு தலைமை மருத்துவமனைக்கு ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து , மாணவரணி உறுப்பினர் படிவங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் மாநில நிர்வாகிகள் டாக்டர் செ. வல்லபன், வி.எஸ்.பெரியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என். ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் ந.ஜெகதீஸ்வரன், பட்டுச்செல்விராஜேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ம. இராஜ்குமார், மாவட்ட துணைச் செயலாளர் தழுதாழை.பாஸ்கர், மாவட்ட பொருளாளர் செ. இரவிச்சந்திரன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், ஒன்றிய செயலாளர்கள் எஸ்.அண்ணாதுரை, எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன், ஒன்றிய பொறுப்பாளர்கள் வீ. ஜெகதீசன், பாடாலூர் சோமு. மதியழகன், மருவத்தூர் சி.ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் து. ஹரிபாஸ்கர், நகரச்செயலாளர் எம். பிரபாகரன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!