Farmers thanks to the Perambalur MLA Tamilselvan
பெரம்பலூர், அக்.06-
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம், அம்மாபாளையம் ஊராட்சிக்குபட்ட பகுதியில் ரூ. 1.26 கோடி செலவில் புதிதாக தார்சாலை அமைக்க பரிந்துரை செய்து உத்தரவு மற்றும் நிதி ஒதுக்கீடு பெற்றுத்தந்த எம்எல்ஏ தமிழ்ச்செல்வனுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.
அம்மாபாளையம் ஊராட்சிக்குபட்ட மூலக்காடு, அந்தாளியப்பன் கோயில் நகர் வரையிலான மண்சாலை குண்டும் குழியுமாக இருந்தது. நீண்ட காலமாக அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் அந்த சாலையை பயன்படுத்தமுடியாமலும், இடுபொருட்கள், விளைபொருட்கள், வாகனங்களில் செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதனால் அந்த சாலையை தார்சாலையாக மாற்றி புதிதாக தார்சாலை அமைக்கவேண்டும் என அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் பெரம்பலூர் எம்எல்ஏ தமிழ்ச்செல்வனிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
இக்கோரிக்கையினை நிறைவேற்ற வேண்டுமான நெஞ்சாலைத்துறை அமைச்சர், செயலாளர், கோட்டபொறியாளர் ஆகியோரிடம் எம்எல்ஏ தமிழ்ச்செல்வன் கோரிக்கை விடுத்திருந்தார். இக்கோரிக்கையினை ஏற்று தமிழக அரசு நபார்டு திட்டத்தின் கீழ் அம்மாபாளையம் ஊராட்சிக்குபட்ட மூலக்காடு, அந்தாளியப்பன் நகர் வரையிலான 5.02 கிலோ மீட்டர் தூரமுள்ள தார்சாலை அமைக்க உத்தரவிட்டு, சாலை அமைப்பதற்காக ரூ.1 கோடியே 26 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து டெண்டர் விடப்பட்டுள்ளது.
இதனால் மகிழ்ச்சியடைந்த அக்கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் பெரம்பலூர் எம்எல்ஏ தமிழ்ச்செல்வனை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.
பின்னர், எம்எல்ஏ தமிழ்ச்செல்வன் தெரிவித்ததாவது : பெரம்பலூர் தொதிக்குட்பட்ட அம்மாபாளையம் ஊராட்சியை சேர்ந்த மூலக்காடு, அந்தாளியப்பன் நகர் வரையிலான மண்சாலை குண்டும் குழியுமாக இருந்தால் அந்த சாலையை தார்சாலையாக மாற்றி புதிதாக தார் சாலை அமைக்கவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனை ஏற்று நான் பரிந்துரைசெய்ததின் அடிப்படையில் தற்போது புதிதாக தார்சாலை அமைக்க உத்தரவிட்டு, நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் விரைவில் துவங்கப்படும் என தெரிவித்தார்.