For Police Constable Exam, Free Sample Competitive Exam: Perambalur Collector Information!

பெரம்பலூர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா விடுத்துள்ள தகவல்:

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தோ;வாணையத்தின் வாயிலாக உத்தேசமாக 10906 இரண்டாம் நிலை காவலர் பணிக்காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே இப்போட்டித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு இலவச இணையதள வகுப்புகள் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் டிக.7 முதல் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது இப்பணியிடத்திற்கான தேர்வு வருகின்ற டிச13 அன்று நடைபெறவுள்ளது. இப்போட்டித் தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு டிச.4 முதல் 8 வரை பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இம்மாதிரி தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 9499055913 என்ற வாட்ஸ்அப் எண்ணிலோ அல்லது அலுவகத்தை நேரிலோ தொடர்பு கொண்டு தங்களுடைய பெயர், ஆதார்எண், நுழைவுச்சீட்டு ஆகியவைகளுடன் டிச.3-க்குள் பதிவு செய்து கொண்டு இம்மாதிரி தேர்வில் கலந்து பயன்பெறலாம் என தகவல் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!