For those who have worked for the advancement of women, Avvaiyar Award: Perambalur Collector Information

பெரம்பலூர் கலெக்டர் வெங்கட பிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்தள்ளதாவது:

மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகத்தின் மூலம், பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு அவ்வையார் விருது தமிழக முதலமைச்சரால் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்கு ரொக்கப்பரிசு, தங்கபதக்கம், சான்று மற்றும் சால்வை வழங்கப்படும். ‘அவ்வையார் விருது” அறிவிக்கப்பட்டு தகுதி வாய்ந்த, தனிப்பட்ட சிறந்த பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விருதினை பெற தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண் கலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுவராக இருத்தல் வேண்டும். மேலும் விண்ணப்பங்கள் சமூக நல அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க இறுதி நாள் 23.01.2021 ஆகும். இறுதி நாளிற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

விருதுக்கான கருத்துரு கையேட்டில் பொருளடக்கம் மற்றும் பக்க எண், தன் விபர குறிப்பு மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் – 2, அரசாணை.(07) சமூக நலம் (ம) சத்துணவு திட்டத் துறை சந 3(1), நாள்.23.01.2020ன் படி (மாவட்ட ஆட்சியர; மற்றும் அலுவலர;கள் அடங்கிய தேர;வுக்குழு) மாவட்ட அளவிலான தேர்வுக் குழுவின் பரிந்துரை, மாவட்ட ஆட்சியரின் பரிந்துரை கடிதம், மாவட்ட சமூக நல அலுவலரின் பரிந்துரை கடிதம், சுயசரிதை, ஒரு பக்கம் தனியரை பற்றிய விவரம் (தமிழ் மற்றும் ஆங்கிலம்), தேசிய மற்றும் உலகளாவிய விருதுகளின் விவரம் (விருது பெற்றிருப்பின் அதன் விவரம், விருதின் பெயர், யாரிடமிருந்து பெற்றது மற்றும் பெற்ற வருடம், கையேட்டில் விருது பெற்ற புகைப்படம், சான்றிதழ் இணைக்கப்பட்ட பக்கங்களுக்கு கொடி வைக்கம், சேவை பற்றிய செயல்முறை விளக்கம் புகைப்படங்களுடன், சேவை பாராட்டி பத்திரிக்கை செய்தி, சேவை ஆற்றியதற்கான விரிவான அறிக்கை, சமூக சேவையாளரின், சமூக சேவை நிறுவனத்தின் சேவை மூலமாக பயனாளிகள் பயனடைந்த விவரம், தொண்டு நிறுவனத்தின் பதிவு, உரிமம், ஆண்டறிக்கை சமூக பணியாளர் இருப்பிடத்தில் அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து (பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்பதற்கான சான்று தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பூர்த்தி செய்து) போன்றவற்றுடன் மாவட்ட சமூக நல அலுவலகம், பெரம்பலூர் (தொலைபேசி எண்: 04328-296209, 04328-224122) என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!