Free training camp on poultry farming in Namakkal
நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வரும் 22ம் தேதி வியாழக் கிழமை காலை 9 மணிக்கு நாட்டுக் கோழி வளர்ப்பு பயிற்சி என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
இப்பயிற்சி முகாமில் நாட்டுக்கோழி ரகங்கள், நவீன கோழி வளர்ப்பு முறைகள், தீவன மேலாண்மை, குஞ்சு பொரிக்கும் விதம், குஞ்சு பொரிப்பான்களின் பயன்கள் குறித்த பயிற்சி நடத்தப்பட உள்ளது.
மேலும் இப்பயிற்சியில் நாட்டுக்கோழிகளைத் தாக்கும் நோய்கள், அறிகுறிகள், அவற்றை தடுக்கும் முறைகள் மற்றும் பராமாரிக்கும் முறைகள் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்படும்.
இப்பயிற்சியில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு நேரில் வந்தோ அல்லது / தபால் மூலமாகவோ வரும் 22ம் தேதி காலை 9 மணிக்குள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பயிற்சிக்கு பதிவு செய்வதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்னை கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.