Humanities chain struggle with VAOs emphasizing the demands of Namakkal RDO Office
நாமக்கல் ஆர்டிஓ அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் ஆர்டிஓ அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பழனிசாமி தலைமை வகித்தார்.மாவட்ட துணை செயலாளர் வேலுசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட பொ ருளாளர் ராஜ்குமார் வரவேற்றார்.
இதில் கிராம நிர்வாக அலுவலங்களில் போதிய மின்வசதி, கழிப்பிட வசதி, பழுதான கட்டிடங்கள் பராமரிப்பு மற்றும் தளவாடங்கள் போ.ன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் வழங்கவேண்டும். அனைத்து வகையான இன்டர்நெட் வழி சேவைகளையும் சிறப்பாக வழங்கும் வகையில் இன்டர்நெட் வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர் உள்ளிட்ட வசதிகள் வழங்கவேண்டும்.
பணிபுரிந்து வரும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான மாவட்ட மாறுதல்களை ஒரே அரசாணை மூலம் உடனடியாக வழங்க வேண்டும். பங்கீட்டு ஓய்வூதிய முறைககு பதிலாக பழைய முறையிலான ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைக வலியுறுத்தப்பட்டன.
மேலும் திருமங்கலத்தில் துப்புரவு ஆய்வாளராக பணியாற்றிய மோகனை ஞாயிற்றுக்கிழமை பணிக்கு வர அதிகாரிகள் அழைத்துள்ளனர். இதில் பணிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற மோககன் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
விடுமுறை நாளில் பணிக்கு வர நிர்பந்தித்த அதிகாரிகளை கண்டித்து விஏஓக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் கலந்துகொண்டனர். முடிவில் வட்டார பொருளாளர் ராமன் நன்றி கூறினார். இதில் நாமக்கல் மா வட்டத்தை சேர்ந்த விஏஓக்கள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றன.