In Perambalur and kunnam mini-circle tournaments at the Perambalur district stadium which is going up .09 Sep.
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் (பொ) விஜயன் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்ட பள்ளிக்கல்வி துறை சார்பாக குன்னம் மற்றும் பெரம்பலூர் குறுவட்டங்களுக்கான குறுவட்ட போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகின்றது.
வேப்பூர், ஆலத்தூர் ஒன்றியங்களை சேர்ந்த உயர், மேல்நிலைப் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் குன்னம் குறுவட்ட போட்டிகளாகவும்,
பெரம்பலூர் மற்றும் வேப்பந்தட்டை ஒன்றியங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் பெரம்பலூர் குறுவட்ட போட்டிகளாகவும் 04.08.16 முதல் 09.09.16 வரை தனித்தனியே நடத்தப்பட்டு வருகின்றது.
அதன்படி 04.08.2016 வியாழன் முதல் 05.09.2016 திங்கள் வரை கால்பந்து, வளைகோல் பந்து, கையுந்து பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, கோ-கோ-, கபடி, இறகுப்பந்து, மேஜைப்பந்து, பூப்பந்து, எறிபந்து, டென்னிஸ், வளையபந்து, கேரம் முதலிய விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.
மேலும் 06.09.2016 முதல் 09.09.2016 வரை குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் 14 வயதிற்குட்பட்ட மாணவ,மாணவியருக்கான 100மீ, 200மீ, 400மீ, 600மீ, உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், 80மீ தடை ஓட்டம் (இருபாலருக்கும் புதியதாக சோ;க்கப்பட்டுள்ளது), 4×100மீ தொடர் ஒட்டமும்,
17 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியருக்கான 100மீ, 200மீ, 400மீ, 800மீ, 1500மீ, (மாணவியருக்கு புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது) 3000மீ (இருபாலருக்கும் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளது) 100மீ தடை ஓட்டம், உயரம் தாண்டுதல், கோலூண்றி தாண்டுதல், (மாணவியருக்கு புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது) நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் 4×100மீ தொடர் ஒட்டமும்,
19 வயதிற்குட்பட்ட மாணவ,மாணவியருக்கான 100மீ, 200மீ, 400மீ, 800மீ, 1500மீ, (மாணவியருக்கு புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது) 3000மீ மற்றும் 5000மீ (இருபாலருக்கும் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளது) தடை ஓட்டம், (மாணவியருக்கு 100மீ மற்றும் மாணவருக்கு 110மீ) 400மீ தடை ஓட்டம் (இருபாலருக்கும் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளது) உயரம் தாண்டுதல், கோலூண்றி தாண்டுதல், (மாணவியருக்கு புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது) நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் 4×100மீ தொடா; ஒட்டமும் நடைபெற உள்ளது.
மேலும் 26.08.2016 அன்று குறுவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடைபெற உள்ளன. எனவே மேற்கண்ட விளையாட்டுப்பிரிவுகளில் ஆர;வமுள்ள மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். இதுகுறித்து மேலும் விபரங்களுக்கு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளரை 9688514464 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.