ஸ்ரீரங்கம் அஞ்லக கோட்டத்திற்கு உட்பட்ட பெரம்பலூர் தலைமை தபால் நிலையத்தில், மாவட்டத்தின் முதலாவது அஞ்சலக தானியங்கி இயந்திரத்தின் செயல்பாட்டை ஆட்சியர் க.நந்தகுமார் துவங்கி வைத்து, வாக்காளர் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை ஏ.டி.எம் மையத்தில் இன்று (22.03.16) ஒட்டினார்.
பெரம்பலூரில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஏ.டி.எம். மையம் ஸ்ரீரங்கம் தபால் கோட்டத்தின் மூன்றாவது ஏடிஎம் ஆகும்.
அஞ்சலக சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டும் இந்த ஏடிஎம் வசதியை பயன்படுத்தி கொள்ள முடியும். வங்கி கணக்கு வைத்திருப்பவர்களும் இந்த ஏடிஎம் வசதியை பயன்படுத்தும் வகையில் விரைவில் தரம் உயர்த்தப்படும்.
பெரம்பலூர் தபால் உட்கோட்ட ஆய்வாளர் முத்துசுப்ரமணியன், தலைமை அஞ்சல் அலுவலக அதிகாரி சிவகாமி உள்ளிட்டவர்கள் அப்போது உடனிருந்தனர்.