finger_vote பெரம்பலூர் : தமிழ்நாடு தேர்தல் ஆணையர் நேற்று தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவது குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 17.10.2016, 19.10.2016 ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் 17.10.2016 அன்று பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம், பெரம்பலூர் நகராட்சி மற்றும் குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி பேரூராட்சிகளுக்கான தேர்தல் நடைபெறும்.

19.10.2016 அன்று ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் லப்பைகுடிகாடு பேரூராட்சி ஆகிய பகுதிகளுக்கான தேர்தலும் நடைபெறவுள்ளது.

26.9.2016 முதல் 3.10.2016 வரை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10மணி முதல் மாலை 5.00 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்படும். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் 3.10.2016 ஆகும். வேட்புமனுக்கள் பரிசீலனை 4.10.2016 அன்று நடைபெறும்.

வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் 6.10.2016 அன்று மாலை 3.00 மணி வரை ஆகும். 21.10.2016 அன்று காலை 8.30 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும். மேலும் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான உறுப்பினர் கூட்டம் 2.11.2016 அன்று நடைபெறும்.

முதற்கட்ட வாக்குப்பதிவு 17.10.2016 அன்றும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 19.10.2016 அன்றும் நடைபெறும். 21.10.2016 அன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும். அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். 2.11.2016 மறைமுகத்தேர்தலுக்கான கூட்ட நாள் ஆகும்.

பெரம்பலூர் மாவட்ட ஊரகப்பகுதிகளில் 1,80,929 ஆண் வாக்காளர்களும், 1,85,936 பெண் வாக்காளர்களும், 9 இதர வாக்காளர்களும் ஆக மொத்தம் 3,66,874 வாக்காளர்கள் உள்ளனர்.

நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 18,157 ஆண் வாக்காளர்களும், 19,058 பெண் வாக்காளர்களும், 2 இதர வாக்காளர்களும் ஆகமொத்தம் 37,217 உள்ளனர். அதேபோல பேரூராட்சி பகுதிகளில் 18,758 ஆண் வாக்காளர்களும், 19,669 பெண் வாக்காளர்களும் ஆக மொத்தம் 38,427 வாக்காளர்களும் உள்ளனர். ஆகமொத்தம பெரம்பலூர் மாவட்டத்தில் 4,42,518 வாக்காளர்கள் உள்ளனர்.

இதில் முதற்கட்ட வாக்குப்பதிவில் 377 வாக்குச்சாவடி மையங்களும் 2,37,935 வாக்காளர்களும் அடங்குவர். இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 356 வாக்குச்சாவடி மையங்களில் 2,04,583 வாக்காளர்களும் அடங்குவர்.

ஊரகப்பகுதிகளில் 632 வாக்குச்சாவடிகளும், நகர்ப்புற பகுதிகளில் 41 வாக்குச்சாவடிகளும், பேரூராட்சி பகுதிகளில் 60 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 733 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

நேரடித் தேர்தல்கள் மூலம் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பதவிக்கு 8 நபர்களும், ஒன்றியக்குழு உறுப்பினர;கள் பதவிக்கு 76 நபர்களும், ஊராட்சி மன்றத் தலைவர்கள் பதவிக்கு 121 நபர்களும், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவிக்கு 1,032 நபர்களும், நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு 21 நபர்களும், பேரூராட்சிமன்ற உறுப்பினர் பதவிக்கு 60 நபர்களும் என மொத்தம் 1,318 பதவிகளுக்கான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

அதேபோல மறைமுகத் தேர்தல் மூலம் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிக்கு 1 நபரும், மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் பதவிக்கு 1 நபரும், ஒன்றியக் குழுத் தலைவர் பதவிக்கு 4 நபர்களும், துணைத்தலைவர் பதவிக்கு 4 நபர்களும், நகராட்சி தலைவருக்கு 1 நபரும், பேரூராட்சி தலைவர் பதவிக்கு 4 நபர்களும், நகராட்சி மற்றும் பேரூராடசி துணைத் தலைவர் பதவிக்கு 5 நபர்களும் என மொத்தம் 20 நபர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

தேர்தல் பணிகளில் 16 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 176 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 5,840 வாக்குச்சாவடி அலுவலர்களுமென மொத்தம் 6,032 நபர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

நகர்ப்புற தேர்தல்களுக்கு 140 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், ஊரகத்தேர்தல்களுக்கு, 633 வாக்குப்பெட்டிகளும் பயன்படுத்தப்படவுள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!