In Perambalur near: arrested with Country made gun Civilians caught and handed him over to the police.
பெரம்பலூர் அருகே சந்தேகத்திற்கிடமாக இரவு நேரத்தில் நாட்டுத்துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த ஒருவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், செஞ்சேரி அருகே உள்ள செட்டிகுளம் சாலையில் வெள்ளனூர் பகுதியில் சந்தேகப்படும் வகையில் இரவு நேரத்தில் சுற்றித்திரிந்த இருவரை பொதுமக்கள் பிடித்து ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
விசாரணையில் அவர்கள் புதுநடுவலூர் அருகே உள்ள வெள்ளனூர்கிராமத்தை சேர்ந்த பெரியண்ணன் மகன் மாசி(37), தம்பிரான்பட்டி கிராமத்தை சேர்ந்த சின்னதுரை மகன் சரவணன்(24) மற்றும் மாசியின் தாத்தா கீதாரி(70) என்பதும் அவர்களிடம் உரிமம் இல்லாத ஒற்றைக்குழல் நாட்டுத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை வருவாய் துறையினர் பெரம்பலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து நாட்டுத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்த பெரம்பலூர் போலீசார் பெரியண்ணன் மகன் மாசி(37) மீது போலீசார் வழக்கு பதிந்து வன விலங்குகளை வேட்டையாட சென்றாரா? அல்லது வேறு ஏதாவது சமூக விரோத செயல்களில் ஈடுபட சென்றாரா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நள்ளிரவு நேரத்தில் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.