In Perambalur, robbers broke the locks of 5 shops and a temple and showed their hands! Police are actively investigating!
பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் பூட்டி இருந்து கடைகளில் பூட்டை உடைத்த சம்பவம் அப்பகுதி வியாபாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் டீக்கடை நடத்தி வருபவர் ஆறுமுகம் மகன் தனசேகர் (51), நேற்றிரவு சுமார் 9 மணி அளவில் கடையை பூட்டி விட்டு இன்று காலை 6 மணிக்கு வந்து, கடையை திறக்க முயன்ற போது, கடையின் வெளிப்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை அறிந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். கடையில் எதுவும் கிடைக்காததால், டீக்கடை அருகிலேயே, பெரம்பலூர் மாவட்டம், மருவத்தூர் அருகே உள்ள பனங்கூரை சேர்ந்த கதிர்வேல் மகன் ஆறுமுகம் (47) நடத்தி வரும் ஹார்டுவேர்ஸ் கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் ரொக்கம் ரூ. 2500 எடுத்துக் கொண்டனர். திருப்தி அடையாத கொள்ளையர்கள் ஹார்டுவேர்ஸ் அருகில் இருந்த மளிகை கடைக்குள்ளும் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர் அடுத்தடுத்த 3 கடையிலும் உள்ளே புகுந்த எதுவும் கொள்ளையர்களுக்கு கிட்டவில்லை. இது குறித்து 5 கடைக்காரர்களும் கொடுத்த புகாரின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரம்பலூர் போலீசார்
தடய அறிவியல் மற்றும் மோப்ப நாய் பிரிவு மூலம் தடயங்களை சேகரித்தும், அப்பகுதி பதிவான காட்சிகளை வைத்தும் கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 24 மணி நேரம் மக்கள் மற்றும், வாகனங்கள் அதிக நடமாட்டமுள்ள பகுதியில் கொள்ளையர்கள் காட்டிய கைவரிசை அப்பகுதியில் இருக்கும் வணிகர்கள், வசிக்கும் பொதுமக்களை அச்சமடைய செய்து உள்ளது.
மேலும், நொச்சியம் – விளாமுத்தூர் சாலையில் கலுங்கடையான் கோவிலிலும் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த உண்டியலை உடைத்து உள்ளே இருந்த பக்தர்கள் காணிக்கை செலுத்திய பணம் உள்ளிட்ட பொருட்களை எடுத்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.