பெரம்பலூர் பாலக்கரை அருகே உள்ள கிணற்றில் மீன் பிடிக்க சென்ற சிறுவன் கிணற்றுக்குள் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
பெரம்பலூர் பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜா மகன் ராஜேந்திரன்(11), இவர் துறைமங்களம் பகுதியிலுள்ள டி.இ.எல்.சி., நடுநிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.
இன்று விடுமுறை தினம் என்பதால் அப் பகுதியை சேர்ந்த சிறுவர்கள் சிலருடன் பாலக்கரை பகுதியிலுள்ள நல்லுசாமி கிணற்றிற்கு சென்று மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார்.
இந்நிலையில் மீன் பிடித்து கொண்டிருந்த சிறுவன் ராஜேந்திரன் எதிர்பாரத விதமாக நிலை தடுமாறி கிணற்றுக்குள் தடுமாறி விழுந்தார்.
இதனால் ரஜேந்திரனனுடன் சென்ற சிறுவர்கள் அதிர்ச்சியடைந்து வீட்டிற்கு ஓடி வந்து உங்கள் மகன் கிணற்றில் விழுந்து விட்டான் என பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.
ராஜேந்திரனின் பெற்றோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது ராஜேந்திரன் தண்ணீர் முழ்கி சிறுவன் ராஜேந்தினை காணவில்லை.
பெரம்பலூர் தீ அணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் ராஜேந்திரனின் உடல் மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெரம்பலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.