In the 100-day work program penpali: ï initiate steps to protest the violation of the ban on the Protest!

பெரம்பலூh; மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம், திம்மூர் கிராமத்தில் செப்.16 அன்று, தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணிபுரிந்த ஜெயலட்சுமி என்பவர் சட்ட விரோத எந்திர பயன் பாட்டினால் டிராக்டர் மோதி பலியானார். இது குறித்து அக்கிராம மக்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோரிக்கை மனுவை அதிகாரிகளிடம் அளித்தனர். பின்னர் கம்யூனிஸ்ட் விதொச சார்பில் பல போராடங்கள் நடததப்பட்டது. எந்த பயனும் இல்லாததால் விதொச சார்பில் கலெக்டர் ஆபிஸ் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்த அறிவிக்கப்பட்டது. ஆனால் காவல்துறை அனுமதி மறுத்தது. இருந்தாலும் தடையயை மீறி 300 க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் விதொச மாநில தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எ.லாசர் தலைமையில் மாநில செயலாளர் எம்.சின்னதுரை விதொச மாநில பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம் ஆகியோர் முன்னிலையில் போராட்டத்தில் ஈடுபடடனர். அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியதால் போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வட்டாட்சியா; பாரதிவளவன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்ததன் பேரில் கலெக்டா; அலுவலகம் சென்று கோரிக்கைகளை விளக்கி மீண்டும் மனு கொடுத்தனர். அம்மனுவில் 100 நாள் வேலை திட்டத்தில் எந்திரங்கள் பயன் படுத்தக்கூடாது என்பதையும் மீறி பயன்படுத்தியதால் தான் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது. இதற்கு காரணமான ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலாளர் ஆகியோர் மீது குற்ற வழக்கு பதிவு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு பயன் படுத்திய இயந்திரங்களை பறிமுதல் செய்ய வேண்டும், உயிர்பலியான ஜெயலட்சுமியின் குடும்பத்திற்கு 20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், அவரது கணவருக்கு அரசு வேலை வழங்குவதோடு தாயை இழந்து வாடும் இரண்டு குழந்தைகளின் கல்விச்செலவை அரசே ஏற்க வேண்டும், திம்மூர் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. இதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. விதொச மாவட்டக்குழு சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 50 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்பட்டது. சிபிஎம் மாவட்ட செயலாளா; ஆர்.மணிவேல், விதொச மாவட்ட செயலாளர் பி.ரமேஷ் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.செல்லதுரை, திமுக நிர்வாகிகள் மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், நகர செயலாளர் பிரபாகரன், விசிக மாநில பொறுப்பாளர் வீரசெங்கோலன், வக்கீல் ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் தமிழ்செல்வன், வழக்கறிஞர் ப.காமராசு, மனிதநேய மக்கள் கட்சி சுல்தான் மொய்தீன், எஸ்டிபிஐ ஷாஜகான், திராவிடர் கழகம் தங்கராசு, அக்ரிஆறுமுகம், கரும்பு விவசாயிகள் சங்கம் ஏ.கே.ராஜேந்திரன், சக்திவேல் யூனியன் முஸ்லீம்லீக் சர்புதீன், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு பி.துரைசாமி, எ.கலையரசி, எஸ்.அகஸ்டின், இளங்கோவன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் எஸ்பிடி.ராஜாங்கம், மாதர்சங்கம் பத்மா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டம் நடத்த விடாமல் செய்வதற்காக வருவாய்த்துறை ஊழியர்களும் உள்ளாட்சித்துறை ஊழியர்களும் காவல்துறையினருடன் சேர்ந்து கிராமங்களில் பெண்களை வரவிடாமல் தடுக்கும் நோக்கில் போராட்ட தினத்தன்று காவேரி குடிநீர் சப்ளை செய்து,ம் 100நாள் வேலைக்கு கட்டாயம் வரவேண்டும் என்றும் வாகனத்தில் செல்லவிடாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுத்ததும் குறிப்பிடத்தக்கது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!