In Tirupur, motorists have decided to charge a fine electronic mode

திருப்பூரில் வாகன ஓட்டிகளிடம் காவல்துறை அபராதம் வசூலினை வங்கி பரிவர்த்தனை மூலம் செய்யும் வகையிலான பிஓஎஸ் கருவிகளை மாநகர காவல் ஆணையர் வழங்கினார் – மேலும் நவீன கட்டுப்பாட்டு அறையினையும் திறந்து வைத்தார் .

திருப்பூர் மாநகர காவல்துறை சார்பில் திருப்பூர் மாநகரில் விபத்து ஏற்படும் இடங்கள் மற்றும் குற்ற சம்பவங்கள் அதிகளவில் நடைபெறும் இடங்கள் என கண்டறியப்பட்ட முக்கியமான பகுதிகளில் தமிழக அரசால் 14 லட்சத்து 80 ஆயிரம் செலவில் 38 மற்றும் தனியார் பங்களிப்புடன் 9 கேமராக்கள் என என 57 இடங்களில் கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன .

மேலும், இவற்றின் செயல்பாடுகளை ஒரே இடத்தில் இருந்து கண்காணிக்குமாறு நவீன கட்டுப்பாட்டு மையம் மாநகர காவல் ஆணையரகத்தில் துவங்கப்பட்டுள்ளது . இதனை மாநகர காவல் ஆணையர் நாகராஜன் துவக்கி வைத்து பார்வையிட்டார் .

சாலைகளில் வாகன ஓட்டிகளிடம் காவல்துறை பணமாக வசூல் செய்வதால் ஏற்படும் குளறுபடிகளை தடுத்திடும் வகையில் வங்கிகள் மூலம் இணைக்கப்பட்ட பி.ஓ.எஸ் கருவிகளையும் காவல் ஆய்வாளர்களுக்கு வழங்கினார் . இதன் மூலம் அபராதம் வசூல் செய்வதில் ஏற்படும் முறைகேடுகளை தடுத்திடும் , பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையிலும் இந்த திட்டங்கள் அமைந்திடும் எனவும் இனி காவல்துறையிடம் பொதுமக்கள் பணமாக அபராதம் செலுத்த வேண்டாம் எனவும் , ஏடிஎம் , கிரெடிட் கார்டு இல்லாத வாகண ஓட்டிகள் நேரடியாக வங்கியில் அபராதம் செலுத்தும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் .

மேலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் மாநகரில் குற்ற சம்பவங்களை தடுத்திட முடியும் எனவும் பேட்டியளித்தார் .

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!