Jamabandi in Perambalur district: immediate solution for 184 applications in 318 petitions

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 வட்டங்களிலும் 1426 ஆம் பசலி ஆண்டு வருவாய் கிராமங்களுக்கான தீர்வாயம் (ஜமாபந்தி) 23.05.17 அன்று துவங்கி இன்று (25.05.2017) நிறைவுபெற்றது.

அதன்படி இன்று 25.05.17 அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெற்ற இந்த வருவாய்த் தீர்ப்பாயத்தில் அனைத்து வட்டங்களிலும் 318 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 184 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மேலும், 45 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 89 மனுக்கள் உரிய விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்டது.

இன்றைய நிகழ்வில் 25.5.2017 ஆலத்தூர் வட்டத்தில் கூத்தூர் உள்வட்டத்திற்குட்பட்ட தொண்டபாடி, மேலமாத்தூர், அழகிரிபாளையம், ஆதனூர் (வடக்கு), ஆதனூர் (தெற்கு), கூடலூர், கூத்தூர், புஜங்கராயநல்லூர், நொச்சிக்குளம், திம்மூர், சில்லக்குடி (தெற்கு), சில்லக்குடி (வடக்கு), ஜெ.ஆத்தூர் ஆகிய வருவாய் கிராமங்களுக்கும்,

வேப்பந்தட்டை வட்டத்தில் வாலிகண்டபுரம் உள்வட்டத்திற்கு உட்பட்ட தொண்டபாடி, நெய்குப்பை, அனுக்கூர், பிரம்ம தேசம், மேட்டுப்பாளையம் (தெற்கு), மேட்டுப்பாளையம் (வடக்கு), பிம்மலூர், வி.களத்தூர், பேரையூர், எறையூர், தேவையூர் (வடக்கு), தேவையூர் (தெற்கு), வாலிகண்டபுரம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கும்,
பெரம்பலூர் வட்டத்தில் பெரம்பலூர் உள்வட்டத்திற்குட்பட்ட அரணாரை (வடக்கு), அரணாரை (தெற்கு), புதுநடுவலூர், சிறுவாச்சூர், நொச்சியம், கல்பாடி (வடக்கு), கல்பாடி (தெற்கு), அயிலூர் ஆகிய வருவாய் கிராமங்களுக்கும், குன்னம் வட்டத்தில் வரகூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட ஓலைப்பாடி (கிழக்கு), ஓலைப்பாடி (மேற்கு), பரவாய் (மேற்கு), பரவாய் (கிழக்கு), புதுவேட்டக்குடி, துங்கபுரம் (வடக்கு), துங்கபுரம் (தெற்கு), காடூர் (வடக்கு), காடூர் (தெற்கு), கொளப்பாடி, வரகூர், குன்னம், பெரியம்மாபாளையம், பெரிய வெண்மணி (மேற்கு), பெரிய வெண்மணி (கிழக்கு) ஆகிய வருவாய் கிராமங்களுக்கும் வருவாய்த் தீர்ப்பாயம் நடைபெற்றது.

இந்த வருவாய் தீர்வாயங்களின் இறுதிநாளான இன்று சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் விவசாயிகள் குடிகள் மாநாடு அந்தந்த வருவாய் தீர்வாய அலுவலர்கள் தலைமையில் நடைபெற்றது.

பொதுமக்கள் இந்த வருவாய் தீர்வாயங்களில் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன் பெற்றனர். 23.5.2017 முதல் 25.5.2017 வரை மூன்று நட்கள் நடைபெற்ற வருவாய்த் தீர்ப்பாயங்களில் பெறப்பட்ட 1023 மனுக்களில் 501 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!