Join Muslim Women’s Aid Society: Perambalur Collector
பெரம்பலூர் கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்த ஆதரவற்ற மற்றும் ஏழ்மை நிலையிலுள்ள மகளிர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தி அவர்களின் வாழ்வாரத்தை மேம்படுத்தும் பொருட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் செயல்பட்டு வருகிறது.
இச்சங்கத்தின் மூலம் ஆதரவற்ற விதவைகளுக்கு மற்றும் ஏழ்மை நிலையிலுள்ள முஸ்லிம் மகளிர்களுக்கு தையல், பூ வேலைப்பாடுகள், கைவினைப் பொருட்கள் போன்றவை உள்ளிட்ட சுயதொழில் செய்ய பயிற்சி அளித்தல், சிறுதொழில் துவங்க உதவிடுதல், குழந்தைகளின் கல்விக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல், மருத்துவ உதவித்தொகை வழங்குதல் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் முஸ்லிம் மகளிரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக செயல்படும் இச்சங்கத்திற்கு நன்கொடை வழங்க விரும்புவோர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகலாம். இச்சங்கத்தில் உறுப்பினராக பதிவு பெற விரும்புவோர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி பதிவு செய்துகொள்ளலாம். மேலும், இச்சங்கத்தன் நன்கொடை மற்றும் தமிழ்நாடு அரசின் இருமடங்கு இணைமானியத்துடன் செயல்படுத்தப்படும் திட்டங்களில் பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்.