Karur: Perambalur Aswins Sweet & Snacks Company Sells Cake That Has Fungus and Is Spoiled: Case Registered! What if Children Eat It?

 

 

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் கிராமத்தை சார்ந்தவர் பிரபாகர், தனது குழந்தைகளுக்காக கரூர் பேருந்து நிலையம் எதிரே பெரம்பலூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அஸ்வின் ஸ்வீட் & ஸ்நாக்ஸ் கிளையில் நொறுக்கு திண்பண்டங்களுடன் பிளம் கேக்கையும் ரூ.1440க்கு ஆசையாக வீட்டிற்கு வாங்கிச் சென்றார். வீட்டிற்கு சென்றவர் குழந்தைகளுக்கு கொடுக்க பிளம்கேக்கை திறந்து பார்த்து போது பெரும் அதிர்ச்சி அடைந்தார். பிளம் கேக் பூஞ்சான் பிடித்து இருப்பதுடன் கெட்ட வாடையும் வீசியுள்ளது. அந்த கேக் 12.12.2024 அன்று தயாரிக்கப்பட்டு டப்பாவில் அடைக்கப்பட்ட அந்த கேக்கிற்கு 31.12.2024 வரை Expery date உள்ள நிலையில் பிளம் கேக் பூஞ்சான் பிடித்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர், அந்த ஸ்வீட் கடைக்கு செல்போனில் தொடர்பு கொண்டு கேட்ட போது, நேரில் வரச் கூறியுள்ளனர். நேரில் சென்ற போது கேக்கை வேண்டுமென்றால் மாற்றித் தருவதாகவும், தவறுதலாகவும் நடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

வரும் டிச.31 வரை Expery date உள்ள கேக் எப்படி கெடும். ஆர்வத்திலோ, ஆசையாகவோ குழந்தைகள் இது போன்ற கேக்குகளை கவனிக்காமல் சாப்பிட்டால் என்னாவது என்றும் தெரிவித்தார். இது குறித்து தகவல் தெரிந்த FSSAI நிறுவன அதிகாரிகள், புகாரை பதிவு செய்தனர். பெரம்பலூரிலும், இந்த நிறுவனத்தின் மீது, FSSAI வழக்குப் பதிவு செய்து அபாதரத்தையும் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப்பில் பிறந்த நாளன்று, 10 வயது பெண் குழந்தை கேக் சாப்பிட்டதால் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஸ்வின் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்தில், ரீபைண்ட் ஆயிலில் தயாரிக்கட்டது நல்லது என்றும், பின்னர். மரச்செக்கு எண்ணெய்யில் தயாரிப்பதே நல்லது என்றும் மாறியதும் குறிப்பிடத்தக்கது. ஒரு போதும் offer அறிவிக்காத அஸ்வின் நிறுவனம் புதிதாக இந்த ஆண்டு ஒரு கிலோ கேக் வாங்கினால், அரை கேக் என விளம்பரம் செய்த போது வாடிக்கையாளர்கள் சந்தேகம் வந்ததாக தெரிவித்தனர்.

அஸ்வின் நிறுவனம் தொடங்கப்பட்ட காலங்களில் வாடிக்கையாளர்களின் நலனையும், உணவு பண்டங்கள் மீது மிகுந் அக்கறையுடன் தயாரித்தது. ஆனால், தற்போது, லாபத்திற்கு மட்டுமே அதிகளவு முக்கியத்துவம் கொடுப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். பெரம்பலூரை மற்ற ஊர்களில் அஸ்வினுக்கு அவ்வளவு வரவேற்பில்லை, பல கிளை திறப்பது, மூடுவதுமாக இருப்பதால் பல franchise- கள் கைசுட்டுக் கொண்டு வெளியேறிவிட்டனர். கடந்த தீபாவளிக்கு, ஸ்வீட் வாங்கியவர்களும், தரம் குறைந்திருந்ததாகவும், தெரிவித்தனர்.

பணம், லாபம் மட்டுமே ஒரு நிறுவனத்தை தொடர்ந்து பயணிக்க வைக்காது, Goodwill-ம். தரம் மட்டுமே எந்தவொரு நிறுவனத்தையும் நிலைத்து நிற்க செய்யும்….!

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!