KMDK General Secretary E.R. Eswaran Thanks to Chief Minister M.K.Stalin for permission to fill lakes, ponds and canals

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

வட்டாட்சியர் அனுமதி பெற்று விவசாயிகள் கட்டணமின்றி ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் மற்றும் கால்வாய்களில் விவசாய பயன்பாட்டிற்கு மண் எடுக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

விவசாயிகளுடைய நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்த இந்த அறிவிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இதன் மூலம் நீர்நிலைகளை அரசுக்கு எந்த ஒரு செலவுமின்றி எளிதாக தூர் வாருவதற்கான ஒரு சிறந்த வழியாகும்.

இதனால் மழைக்காலங்களில் நீர்நிலைகளில் அதிகப்படியான மழை நீரை தேக்கி வைத்துக் கொள்ள முடிவதோடு பல வருடங்களாக தூர்வரப்படாத ஏரிகள், குளங்கள், குட்டைகள் மற்றும் கால்வாய்கள் இதன் மூலம் தூர்வாரப்பட்டு பராமரிக்கப்படும்.

பானைத் தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு வண்டல் மண், களிமண் வெட்டி எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களது வாழ்வாதாரம் காப்பாற்றப்படும். நான் சட்டமன்றத்திலே பொங்கல் தொகுப்பில் மண்பானை வழங்க வேண்டுமென்று பேசியிருந்தேன்.

அவ்வாறு மண்பானை வழங்குவதன் மூலம் அவர்களது வாழ்வாதாரம் காப்பாற்றப்படும். இந்த அறிவிப்பை அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன், என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!