Kumbabhishekam festival of Andipatti kenhammal temple near Namakkal
நாமக்கல் அருகே உள்ள ஆண்டிப்பட்டி கெங்கம்மாள் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
நாமக்கல் தாலுக்கா ஆண்டிபட்டியில் கெங்கம்மாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக விழா கடந்த 12ம் தேதி காலை பரமத்தி வேலூர் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
இதனையடுத்து மாலை கங்கா பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து பூஜை, ம்ருத்ஸங்க்ருஹணம், அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம் நடைபெற்றது. 13ம் தேதி காலை யாக சாலை பிரவேசம், கடஸ்தாபனம், பூர்ண கும்பகடஸ்தாபணம், அக்நிமதணம், சாந்தி ஹோமம், பூர்ணாஹூதி நடைபெற்றது.
மாலை லக்ஷ்மி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், காயத்ரி ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. நேற்று காலை 3 மணிக்கு நூதன அஷ்டபந்தன பிரதிஷ்டை, விநாயகர், கெங்ககையம்மன், வீரபத்திரர் சுவாமிகளுக்கு யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், சாந்தி ஹோமம், பிரதிஷ்டை பூர்ணாஹூதி நடைபெற்றது.
காலை 7.15 மணிக்கு விநாயகர், கெங்கம்மாள், வீரபத்திரர் ஆலயங்களுக்கு மகாகும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர்கள் குழு தலைவர் கன்னையன், துணைத்தலைவர் கார்த்திகேயன், செயலாளர் பிரபாகரன், இணை செயலாளர் மாதேஸ்வரன், பொருளாளர் கணேஷ் உள்ளிட்ட கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.
கும்பாபிஷேக விழாவில் ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.