Lawyers, the neglect of judicial functions condemned to Perambalur Police Inspector : Petition to SP
பெரம்பலூர் பார் அசோசியசனை சேர்ந்த வழக்கறிஞர்கள் இன்று பெரம்பலூர் காவல் ஆய்வாளர் தரக்குறைவாக நடந்து, வழக்கறிஞரை தாக்க வருவதாக கூறி நீதிமன்ற புறக்கணிப்பு செய்ததுடன், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இடமும் மனு கொடுத்தனர்.
பெரம்பலூர் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாக குழுவின் அவசர கூட்டம் இன்று தலைவர் இ.வள்ளுவன்நம்பி தலைமையில் இன்று காலை 9.30 மணியளவில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்,
பெரம்பலூர் வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினராக இருப்பவர் மோகன், இவர் பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்குத் தொடர்பாக சென்றுள்ளார்.
அப்போது அங்கு இருந்த காவல் ஆய்வாளர் மணிவண்ணன், தரக்குறைவாக நடந்து கொண்டதாகவும், மிரட்டியும், அசிங்கமாக திட்டி உள்ளார்.
இதே போன்று உதவி ஆய்வாளர் மோனிகாவும், அவமரியாதையாக நடந்துள்ளார். இச்சம்பவத்தை சங்கம் கண்டிப்பதோடு, அவர்கள் இருவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இன்று, நாளை , நாளை மறுநாள் பெரம்பலூரில் உள்ள நீதிமன்ற பணிகளில் இருந்து விலகி இருப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், இது குறித்து பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தலிடமும் உரிய நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனுவும் அளித்துள்ளனர். செயலாளர் எம்.சுந்தரராஜன், பொருளாளர் என்.சீனிவாசன், வழக்கறிஞர்கள் செந்தில்நாதன், சிவராமன் உள்பட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.