Malpractice Milk Producers Association abuse: Members protest demanding action! near in Perambalur

பெரம்பலூர் அருகே உள்ள திருப்பெயர் பால் உற்பத்தியாளர்கள் சங்க சொசைட்டியில் முறைகேடு நடப்பதாக கூறி பால் ஊற்றாமல் உறுப்பினர்கள் போராட்டம் செய்தனர். அதை அறிந்த ஆவின் இணைப்பதிவாளர் அலுவலத்தில் இருந்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கொடுத்த உறுதியின் பேரில் பால் ஊற்றினர்.

கடந்த 20 வருடங்களாக செயல்பட்டு வரும் அந்த சங்கத்தில், தொடங்கிய நாள் முதல் அதன் செக்கரட்டரி ஆக திருநாவுக்கரசு (வயது 51) பணி செய்து வருகிறார். தற்போது அதன் பால் சொசைட்டி தலைவராக தாமரைச்செல்வி (வயது 37), இவரின் கணவர் பெருமாளுக்கு, செகரட்டரி மாமன் முறை, அந்த சொசைட்டியின் எழுத்தராக இருக்கும் ராதாவும், செக்கரட்ரியின் அண்ணன் மகள் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு லாபத்தில் இயங்கி வந்த சங்கம், தற்போது நட்டத்தில் இயங்குகிறது என்று காரணம் கூறியதால் அதைத் தொடர்ந்து பொதுமக்கள் லாப நஷ்டக் கணக்கு கேட்டு வாங்கி பார்த்த பொழுது கேன் மூடி, பிளிச்சிங் பவுடர், கொரனோ நிவாரண நிதி, மின்பொருள் வாங்கிய விபரம், அலுவலக உபகரணங்கள் வாங்கிய பொருட்கள் என அனைத்திற்கும் தவறாக மிக அதிகமான தொகை கணக்கு எழுதி மோசடி நடந்து உள்ளதாக குற்றம்சாட்டினர்.

தினம்தோறும் பொதுமக்கள் ஊற்றும் பாலில் கொழுப்புச்சத்து குறைவாக இருப்பதாக பால் ஊற்றும் 135 உறுப்பினர்களில் 120 உறுப்பினர்களுக்கு கணக்கு காட்டி மிகவும் குறைந்த விலையில் பால் விலையை நிர்ணயம் செய்கின்றனர். அவர்கள் பாலில் கொழுப்பு பார்ப்பதில் ஒரு முறைகேட்டை செய்து அதிக அளவில் தனிப்பட்ட முறையில் லாபம் அடைவதாக என உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சொசைட்டியின் தலைவர் மற்றும் செக்கரட்டரி ஆகியோர் அதிகாரிகளின் விசாரணையில், பொதுவாக அனைத்து மாடுகளும் ஒரே கொழுப்பு உள்ள பால் கரப்பது இல்லை அதன் உடல் ரீதியாக மாறுபடும் அவ்வாறு கொழுப்பு குறைந்த பால்களில் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்று, கொழுப்பு அதிகமாக கணக்கு காட்டி இது நாள் வரை அவர்களுக்கு சொசைட்டியின் லாபக் கணக்கில் இருந்து நாங்கள் பணம் கொடுத்து வந்தோம். தற்போது சொசைட்டி அதிக நஷ்டத்தில் இயங்குவதால் கடந்த 20 நாட்களுக்கு முன்பு இனிமேல் அவ்வாறு கொடுக்க இயலாது எனக்கு கூறி உண்மையாக என்ன கொழுப்பு வருகிறதோ அதற்கு உண்டான தொகையை வழங்க முடியும் என கூறி அதனை வழங்க ஆரம்பித்ததால் தற்போது பொதுமக்கள் பிரச்சனை செய்கின்றனர். தற்போது நாங்கள் கடந்த 20 நாட்களாக அவ்வாறு வழங்காமல் இருந்ததினால் இப்போது சொசைட்டிக்கு 29,000 லாபம் இருக்கிறது என தெரிவித்தனர்.


மேலும், அது குறித்து அதிகாரிகள் பொதுமக்கள் முன்னிலையில் ஆய்வு இரு தரப்பினரையும வைத்து ஆய்வு நடத்தினால் மட்டுமே உண்மை தன்மை தெரியவரும் அப்பகுதி மக்கள் எதிர்பர்க்கின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!