Mather union blockade protest in Perambalur condemning the central government; 187 women arrested.
சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலைவாசி உயர்வு விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை திரும்பப்பெறவேண்டும், பெண்களை பாதுகாக்கும் சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நேற்று மாவட்ட தலைநகரங்களில் நாடு தழுவிய முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பெரம்பலூர் புதியபேருந்து நிலையம் முன் முற்றுகைப் போராட்டத்தில், மாதர் சங்க மாவட்ட துணைத்தலைவர் கலையரசி தலைமையில் ஈடுபட்டனர். மாதர் சங்க நிர்வாகிகள் சின்னபொண்ணு, மகேஸ்வரி, பூஞ்சோலை, மாரியம்மாள், லெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாதர் சங்க ஒன்றிய செயலாளர்கள் வேப்பூர் பி.சின்னப்பொண்ணு, ஆர்.வஸந்தா, பெரம்பலூர், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் செல்லதுரை, விதொச மாவட்ட செயலாளர் ரமேஷ் சிபிஎம் ஒன்றிய செயலாளர் ராஜாங்கம் மதிமுக நிர்வாகி துரைராஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். முற்றுகை போராட்டம் நடத்த காவல்துறை எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசாருக்கும் மாதர் சஙக நிர்வாகிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. போராட்டத்தில் கலந்து கொண்ட மாதர் சங்கத்தினர் உள்பட 187 பெண்கள் கைதாகினர். பின்னர், போலீசார் விடுவித்தனர்.