On behalf of the Pavendar Bharathidasan Peravai ilakkiya Big Three Festival!

Bharathidhaasan பெரம்பலூர் பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவை சார்பில் தனித்தமிழ் நூற்றாண்டு விழா, அறிவுத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, மதிப்புறு முனைவர் பட்டம் பெற்ற ஓவியர் கி.முகுந்தனுக்கு பாராட்டு விழா ஆகியவை நாளை மாலை 3 மணி அளவில் முப்பெரும் விழாவாக பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ரெட்டியார் அரங்கத்தில் நடக்கிறது.

பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவைத் தலைவர் கவிச்சிட்டு வேல்.இளங்கோ தலைமை வகிக்கிறார். ஓவியர் முகுந்தன் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

பேரவை பொருளார் புலவர் விளவை செம்பிம்பியன், முனைவர் பொன்னொளியனார், கவிஞர் முத்தரசன், கவிஞர் சிங்காரவேலு, கண்காணிப்பாளர் மு.பக்கிரிசாமி, தமிழாசிரியர் மூ.பிச்சைப்பிள்ளை, ஆசிரியர் சோ.சிவானந்தம், கவிஞர் தேசிங்கு ராஜன், பேரவை இணைச் செயலாளர்கள் தமிழாசிரியர்கள் வீ.சின்னம்மாள், செ.இராகிணி, ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

கோவை – சூலூர், பாவேந்தர் பேரவை, புலவர் செந்தலை கவுதமன் பேரூரை நிகழ்த்துகிறார்.

கலை இலக்கிய பெருமன்றத் தலைவர் எழுத்தாளர் பி.தயாளன், திராவிடர் கழக பெரம்பலூர் நகர செயலாளர் அக்ரி.ஆறுமுகம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை சேர்ந்த கவிஞர் தேவஅன்பு, முனைவர் அகவி ஆகியோர் பாராட்டுரை நிகழ்த்துகின்றனர்.

கவிஞர் சிற்றரசு நன்றி கூறுகிறார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!