Perambalur: 13 pounds of jewelry stolen from a locked house; Police investigating!
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து டீக்கடைக்காரர் வீட்டில் 13 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்யைடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், மேலமாத்தூர் கிராமத்தை சேர்ந்த சுந்தரம் மகன் சுரேஷ் (39). சென்னையில் டீக்கடை நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு அவரது மனைவியை மேலமாத்தூரில் இருந்து சென்னைக்கு அழைத்து சென்றார். மீண்டும் அவர் கடந்த 2 ம் தேதி மேலமாத்தூரில் உள்ள வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 13 பவுன் தங்க நகையை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.
இது குறித்து குன்னம் போலீசாருக்கு கொடுத்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன், வீட்டில் கிடைத்த மர்ம நபர்களின் தடயங்களை கைப்பற்றினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்தும் போலீசார் கொள்ளையர்களை அடையாளம் பணியில் தீவிரைமாக ஈடுபட்டுள்ளனர்.