Perambalur: 5 kg tumor removed from woman’s uterus: Lakshmi hospital doctors achievement!
பெரம்பலுாரில், இளம்பெண் வயிற்றில் இருந்த 5 கிலோ கட்டியை அகற்றி பெரம்பலுார் லட்சுமி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்தனர்.
பெரம்பலுார் மாவட்டம், அய்யலுார் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் மனைவி செந்தமிழ்செல்வி (35), இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக கடுமையான வயிற்று வலி இருந்ததுடன், அடிக்கடி வயிறு வீங்குதல் போன்ற தொந்தரவுகள் இருந்து வந்தது. இதற்கு அவ்வப்போது பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று மாலை செந்தமிழ்செல்விக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. பெரம்பலுார் லட்சுமி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். அவரை அல்ட்ரா ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்து பார்த்த டாக்டர்கள், செந்தமிழ்செல்விக்கு கர்ப்பப்பையில் கட்டி இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதைத்தொடர்ந்து, லட்சுமி மருத்துவமனை நிர்வாக இயக்குநரும், அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் கருணாகரன், குழந்தையின்மை டாக்டர் ஜெயலட்சுமி, மயக்கவியல் டாக்டர் தினேஷ் மற்றும் நர்சுகள் ரம்யா, கிருஷ்ணதேவி, கோமதி ஆகியோரை கொண்ட மருத்துவக்குழுவினர் செந்தமிழ்செல்வி கர்ப்பப்பையில் இருந்த 5 கிலோ எடை கொண்ட கட்டியை அகற்றி சாதனை படைத்தனர். செந்தமிழ்செல்வி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது, நலமுடன் உள்ள அவர் இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என டாக்டர் கருணாகரன் தெரிவித்தார்.