Perambalur: A 2-year-old boy who was trying to get his sister off the school bus was killed after being hit by the wheels of the bus!
பெரம்பலூர் மாவட்டம், பசும்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் சிங்கராவேல் – சந்தியா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளது. முதல் குழந்தை விசித்ரா வி.களத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு படிக்கிறார். விசித்தராவை சந்தியா பள்ளிப் பஸ்சில் ஏற்றி விட மற்றொரு குழந்தையான சண்முகவேலு (2) -வை உடன் அழைத்து வந்துள்ளார். விசித்ராவை பஸ்சில் ஏற்றி விட்ட போது அருகில் இருந்த குழந்தை சண்முகவேல் பள்ளி பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் இன்று காலை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.