Perambalur: A boy who slipped in a well drowned in the water!
பெரம்பலூர் அருகே பாடாலூர் போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர்கள் செல்வகுமார் – ராமாயி தம்பதியினர். இவர்களுடைய மகன் வர்னேஷ் (8). இவன் இன்று மாலை 3 மணியளவில் அங்குள்ள அரசமரத்தடியில் அவனது நண்பன் சுப்பிரமணியனுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, இயற்கை உபாதை கழித்த சிறுவன் அருகே இருந்த துரைராஜ் என்பவரின் வயலில் உள்ள கிணற்றில் கால்களை கழுவிக் கொண்டு மேலே வந்த போது வழுக்கி வீழ்ந்தான். இதனை பார்த்த சிறுவன் சுப்ரமணி ஓடி சென்று வீட்டில் இருந்த வர்னேஷ் அக்கா வனிதாவிடம் தெரிவித்தான். அக்கம்பக்கத்தினர் தகவல் அறிந்து வந்து மீட்பதற்குள் சிறுவன் கிணற்று தண்ணீருக்குள் மூழ்கிவிட்டான். இது குறித்து பெரம்பலூர் தீயணைப்பு துறையினருக்கு பாடாலூர் போலீசார் தகவல் தெரிவித்தனர். சுமார் 2 மணி நேர தீவிர தேடலுக்கு பின்னர், சிறுவனை சடலமாக தீயணைப்புத் துறையினர் மீட்டனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.